பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

"ஒவ்வொரு இந்தியனும் ஒரு நாளைக்கு 3 பைசா வீதம் சேமித்தால் 65 கோடி இந்தியரின் சேமிப்பு 195 கோடி காசுகள் ஆகும். 30 நாட்களுக்குச் சேமித்தால் 5,830 கோடி காசுகள் ஆகும். 12 மாதங்களில் அதாவது நாளைக்கு 3 காசு வீதம் சேமித்தால் ஆண்டில் சுமார் 700 கோடி ரூபாய்கள் சேமிக்கப்படும். (பக்கம் 93-94)

இந்தப் புள்ளி விவரம் பனித்துளி போலத் தொடங்கும் சேமிப்பு, பனிமலை இமயமாக எழுந்து உயர்ந்து உறுதியாய் நிற்கும் உண்மையை எவ்வளவு அழுத்தமாகக் கூறுகிறது! எல்லா எண்களும் நம் கவ னத்தில் நிலைக்காவிட்டாலும், 65 கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரும் நாளுக்கு 3 காசு வீதம் சேர்த்தால் ஓராண்டில் அது 700 கோடி ரூபாயாகப் பெருகியி ருக்கும் என்பது நம் மனத்தைவிட்டு மறையாது.

மணவையார் இந்த 'விழா தந்த விழிப்பு' நாவல் மூலம் சிறு சேமிப்பு உணர்வை, சிக்கனத்தின் உயர்வை சிறுவர்கள் மனத்தில் ஆலம் விதையாக விதைத்துவிட்டார். இந்த விதைகள் மனத்தில் விரிந்த நிழல்தரும் விருட்சமாக வளர்ந்து நிலைத்து நின்று நலமும் வளமும் தரும் என்பது திண்ணம்.

டாக்டர். பூவண்ணன்