பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 17

முருகு வந்ததும் வராததுமாகக் கூறினான்.

'இன்னிக்குச் சிங்காரத்துக்குச் சரியான தண் டனை கிடைச்சுதுடா. இதுவரை நம்மிடம் மட்டும் தன் கைவரிசையைக் காட்டி வந்தர்ன். இன்னிக்கு ஆசிரியரிடமே வாலை ஆட்டிட்டான். ஆசிரியருக்கு அவன் மீது ரொம்பக் கோபம். நெறையத் திட்டிட்டார். நீண்ட நேரம் பெஞ்சு மேலே நிறுத்திட்டார்'டா'

மூச்சுவிடாமல் முருகு சொல்லி முடித்தான். 'பின்னே. கோபம் வராதா? அவன் எவ்வளவு பெரிய குறும்பு செய்திருக்கான்' என்று கூறிக் கொண்டே காளிமுத்து அங்கே வந்து சேர்ந்தான்.

காளிமுத்து, சிங்காரத்தின் வகுப்புத் தோழன் மட்டுமல்ல; நெருங்கிய நண்பனும் ஆவான். ஆனால், சிங்காரத்திடம் இல்லாத சில நல்ல குணங்கள் இவனிடம் உண்டு. சிங்காரம் போல் அல்லாமல் சுந்தரத்திடமும் அன்போடும் பண் போடும் பழகி வந்தான். சுந்தரம் போலவே முருகுக்கும் காளிமுத்துவை ஓரளவு பிடிக்கும்.

'சிங்காரம், அப்படி என்னதான் குறும்பு செய்துவிட்டான் சிங்காரம் தன் வகுப்பு ஆசிரி