பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 19

என்றாலும் சிங்காரம் செய்த குறும்பை அறிந்து கொள்ள அவன் உள்ளம் துடித்தது. பொறுமை இழந்தவனாக முருகை நோக்கி,

'விஷயத்தைச் சொல்லுன்னா, பெரிசா என் னமோ கதையளக்கிறீயே! சிங்காரம் அப்படி என்னதான் செய்திட்டான்? சுந்தரத்தின் ஆவலும் அவசரமும் வார்த்தை வடிவில் போட்டியிட்டன.

இனியும் சஸ்பென்சை வளர்க்க விரும் பாத முருகு சிங்காரம் செய்த குறும்பை விளக்கத் தொடங்கினான்.

'நேற்றுக் காலை வகுப்பில் வானொலி பற்றிப் பாடம் நடந்தது. அப்போது ஆசிரியர் பேச்சுவாக்கில் எங்க வீட்டு வானொலிப் பெட்டி கூட பழுதாகிவிட்டது என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட சிங்காரம், நேற்று மாலை ஆசி ரியர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கே போயிருக்கிறான். அவர் மனைவியிடம் 'ஆசி ரியர் கடைத் தெருவில் உள்ள 'ரேடியோ ரிப் பேர் கடையில் இருக்கிறார். ரிப்பேராக உள்ள ரேடியோவை ரிப்பேர் செய்ய வானொலிப் பெட்டியைக் கடைக்குக் கொண்டுவரச் சொன்