பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 21

தோறும் வகுப்புக்கு வெளியே நிற்கிறானே? அதைவிட இது ஒன்றும் கேவலமில்லை'

தன்னைத் தாழ்த்திப் பேசியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துவிட்டதாக சிங்காரம் இறு மாந்தான். ஏளனப் புன்னகையோடு தன் நண்பர் களை நோக்கினான். அறிவானந்தத்தைப் பற்றி இழிவாகப் பேசியதில் அவனுக்கு ஒருவித மகிழ்ச்சி மனதுக்குள் ஏற்படவே செய்தது.

ஆனால், அறிவானந்தம் பற்றி சிங்காரம் எகத்தாளமாகப் பேசியது அங்கிருந்த யாருக் குமே பிடிக்கவில்லை. அறிவானந்தம் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். எல்லோரிடமும் அன் பாகப் பழகுவான். நண்பர்களுக்கு எந்த உதவி யையும் செய்யத் தயங்கமாட்டான். அதனால் மாணவர்கள் எல்லோருக்குமே அவனை ரொம் பப் பிடிக்கும். ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந் தவன். இதனால் அவனை ஆசிரியர்களும் விரும் வினார்கள். அவனிடம் அன்பு செலுத்தினார்கள். ஆதரவு காட்டினார்கள்.

அவன் மீது பொறாமைப்படும் சிங்காரத் துக்கு மட்டும் இதெல்லாம் பிடிக்காது. அறிவா