பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 25

துக்கு இனியும் பேசாமல் இருக்க முடிய வில்லை. அவனுக்கும் காரணத்தை அறிந்து கொள்ள ஆர்வத் துடிப்பாக இருந்தது. அவன் முருகை நோக்கிப் பேசத் தொடங்கினான். 'வகுப்புக்குத் தாமதமா வர்றதுக்கும் அவங்க வீட்டிலே சோறு பொங்குறதுக்கும் என்னடா தொடர்பு? சற்று வேகமாகவே காளிமுத்து கேட் டான். இக் கேள்வி அவனுள்ளிருந்து வெளிப் பட்ட ஆர்வப் பெருக்கை வெளிப்படுத்துவதாயி ருந்தது.

மேன்மேலும் மர்மத்தை நீட்டித்துச் செல்ல விரும்பாத முருகு லேசாகக் கனைத்துக் கொண்டு அந்த இரகசியத்தைத் தெளிவாக்கத் தொடங்

கினான்.

'அறிவானந்தம் குடும்பம் ரொம்ப ஏழைக் குடும்பம். அவனோட அப்பா ரொம்ப நாளைக்கு முந்தியே இறந்துட்டார். அவனோட அம்மா கடைகளுக்குப் பலகாரம் சுட்டு விற்கி றாங்க. காலையில் சுட்ட பலகாரங்களை அறிவா னந்தம்தான் கடைவீதிக்குக் கொண்டு சென்று வாடிக்கைக் கடை ஒவ்வொன்றுக்கும் கொடுத்து