பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விழா தந்த விழிப்பு

வருவான். இந்த வேலை நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும். காலை வேளையில் அந்த வேலை முடிந்த பிறகே, அவன் பள்ளிக்கூடம் வரமுடியும். எவ்வளவுதான் விரைவாகப் போட் டாலும் பள்ளிக்கூடம் வருவதற்குத் தாமதமாகி விடுகிறது. அதனாலேயே அவன் வகுப்புக்குத் தாமதமாக வரும்படி ஆயிடுது.'

முருகு ஒருவாறு பேசிமுடித்து நண்பர் களின் முகங்களை ஆவலோடு நோக்கினான். ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு உணர்வு கள் நிழலாடிக் கொண்டிருந்தன.

சுந்தரம் எதையோ நினைவுபடுத்திக் கொண்

டபெனொகி,

"நான்கூட பலநாள் பார்த்திருக்கிறேன். காலை யில், ஒவ்வொரு கடையாகப் போய் வருவான். பாவம்'டா அறிவானந்தம்' தன் ஆழ்ந்த அனுதா பத்தை ஆறுதல் உணர்வோடு வெளிப்படுத் தினான் சுந்தரம்.

அதே சமயம், மேலும் ஒரு விந்தையான சந்தேகத்தைக் கிளப்பினான் முருகு.