பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 27

'அறிவானந்தம் வகுப்புக்குத் தாமதமா வர் றான். ஆனால், எல்லாப் பாடத்திலும் எப் போதும் அவனுக்கு முதலிடமே கிடைக்குது நாமும் தான் நேரம் தவறாம வகுப்புக்கு வர்றோம். இருந்தாலும், முப்பது மார்க்குக்கு மேலே மூக்கை நீட்டவே முடியலே. ஆனால் இவ்வளவு கஷ்டத்துக்கு இடையிலே அவனால் மட்டும் எப்படி'டா மதிப்பெண்களைக் குவிக்க முடியுது? வியப்போடு கேட்டான்.

அறிவானந்தம் அதிக மதிப்பெண்கள் வாங் கும் மர்மத்தைப் போட்டு உடைப்பதாக நினைத் துக் கொண்டு சுந்தரம் பேசினான்.

"ஒருவேளை ஏழைப் பையன் கஷ்டப் பட்டுப் படிக்கிறானேன்னு ஆசிரியர் மதிப் பெண்களை அள்ளி விடுகிறாரோ என்னவோ!'.

சுந்தரத்தின் பேச்சில் பொறாமையும் கேலி யும் கலந்திருந்தது.

சிங்காரம் எகத்தாளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு அதெல்லாம் இல்லேடா. ஆசிரியரை நல்லா காக்காபிடிச்சு வச்சிருக்கான்'டா. அவர் வீட்டுக்கு அடிக்கடி போய் வீட்டு வேலை