பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விழா தந்த விழிப்பு

ரம்தான் காசு கொடுத்தான். அக் காசுக்குப் பல காரம் வாங்கிய வேலை மட்டும்தான் என்னுடை யது." என்று முருகு கேட்ட கேள்விக்குப் பதில ளித்தபடி மீண்டும் சிங்காரம் வரும் திக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். சிங் காரம் வருவதாகத் தெரியவில்லை. சலிப்புடன் மீண்டும் முருகுவிடம் திரும்பினான்.

முருகு பேசினான்.

'சிங்காரம் ரொம்பக் கொடுத்துவச்சவன் 'டா அவன் எப்பப் பார்த்தாலும் எதையாவது தின்னுக்கிட்டே இருக்கான். சினிமாவுக்கு அடிக் கடி போறான். அவனுக்கு அவன் அப்பா நிறையக் காசு கொடுக்கிறார். எங்கப்பா, எனக்கு ஒரு ரூபாய் கொடுப்பதற்குள் ஒன்பதாயிரம் கேள்வி கேட்டு துளைச்சு எடுத்தர்றார் என்று கூறி, தன் நிலைமையை எண்ணி வருந்தினான் முருகு, தனக்கும் இதைப் போல் அமையவில் லையே என ஏங்கினான். ஒருகணம் சிங்கா ரத்தின் நிலையை எண்ணிப் பொறுமினான். இதைக் கண்ட காளிமுத்து முருகைத் தேற்றும் வகையில் ஆறுதல் கூறும் முகமாக, “முருகு நீ