பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விழா தந்த விழிப்பு

சிங்காரம் இம்மாதிரி பேசியது முருகுக்கு அறவே பிடிக்கவில்லை. ஏனெனில், அறிவானந் தத்தின் போக்கு அறிந்தவன். அவன் குடும்ப நிலை தெரிந்தவன். எல்லாவற்றிற்கும் மேலாக அறிவானந்தத்தை அவனுக்கு மிகவும் பிடிக்கும். நெருங்கிய நண்பனும்கூட. எனவே சிங்காரம் கூறியதை மறுத்துப் பேசினான்:

'நீங்கள் நினைப்பதுபோல அறிவானந்தம் ஒன்றும் வடிகட்டின கஞ்சன் இல்லை. உங்களைப் போல் வீண் செலவு செய்யாதவன். அவனைப் போய் கஞ்சன் என்று எப்படி சொல்ல முடியும்? கண்டது கற்கப் பண்டித னாவான்' என்பது பழமொழி. இதன்படி தனக்குக் கிடைக்கிற காசுக்கு ஏதாவது பழைய புத்தகம் வாங்குவான். இல்லை என்றால் நல்ல வழியில் செலவு செய்வான். அதுவும் இல்லை என்றால் அந்தக் காசைச் சேர்த்து வைப்பான். சிங்காரம்போல் தின்று தீர்க்கமாட்டான். பட பட என்று கூறிமுடித்தான் முருகு.

தன் நண்பன் அறிவானந்தம் பற்றிய அவ துறை துடைத்த மகிழ்ச்சி, பெருமிதம் முருகு

விடம் காணப்பட்டது.