பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விழா தந்த விழிப்பு

கங்களையும் பிறரிடம் அன்பாகப் பழகும் பண் பியல்புகளையும் கண்டு பொறாமை கொண்டி ருந்த சிங்காரம் இதைக் கேட்டு கேலியாகச் சிரித் தான். பின் முருகைப் பார்த்து,

"அவனை ஏன்டா கண்ட இடமெல்லாம் தேடணும்? கழுதை கெட்டா குட்டிச் சுவர். அறி வானந்தம் பள்ளிவிட்டால் நூலகம்; அதையும் விட்டா பள்ளி சேவிங்ஸ் பேங்க் கெளன்டர்' கேலியாகப் பேசிவிட்ட பெருமித்ததோடு நடந் தான்.

இப்படி சிங்காரம் வஞ்சகப் புகழ்ச்சியாகப் பேசியது அறிவானந்தத்துக்குப் பிடிக்கவில்லை. சிங்காரம் இப்படியெல்லாம் அறியாமையால் பேசுகிறானா அல்லது பொறாமையால் பேசுகி றானா என்று அறிவானந்தத்தால் முழுமையாக அனுமானிக்க இயலவில்லை. எதுவாக இருந் தாலும் தகுந்த பதில் தர முருகு முற்பட்டான். ஆனால், அறிவானந்தம் அவனைப் பேசவி டாமல் தானே பேசினான்:

'நூலகமும் சேமிப்பு வங்கியும் யாரையும் குட்டிச்சுவர் ஆக்குகிற இடமில்லை. யாரையும்