பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 53

ண்பர்கள் வழக்கமாகச் சந்திக்கும் மரத் தடியில் சிங்காரம் நின்று கொண்டி ருந்தான். மிகவும் களைப்பாகக் காணப்பட்ட சிங்காரத்தை நோக்கிக் காளிமுத்து வந்து சேர்ந் தான்.

சிங்காரத்தின் உடலைத் தொட்டுப் பார்த்த படி காளிமுத்து பேசினான்:

“என்ன சிங்காரம் உடம்பு சரியாயிடிச்சா? என்னடா நீ உடம்புக்கு நோய் நொடி"ன்னு அடிக்கடி படுத்துக்கறே?' அவன் கேள்வியில் அன்பும் பாசமும் பிணைந்திருந்தது. சிங்கா ரத்தின் உடல் நலத்தின் மீது அவனுக்கிருந்த அக்கறையைப் புலப்படுத்தியது. இதைக் கேட்டு நெகிழ்ந்து போன சிங்காரம், தன் நோய்க்கான காரணம் கூற முற்பட்டான்.