பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 55

வயிற்று வலி, தொடர்ந்து வயிற்றுப் போக்கு. பிறகு மாத்திரை, ஊசின்னு இரண்டுநாள் பெரும் பாடு அப்போ என் தாத்தா சொன்னது இன்னும் என் மனசிலே பசுமையா இருக்கு."

அப்படி என்னடா சொன்னார் உன் தாத் தா?”

சிங்காரம் அவசரப்படுத்தினான் காளிமுத்து தொடர்ந்தான்.

'வயிறு என்பது குப்பைத் தொட்டி அல்ல, கிடைத்ததையெல்லாம் வாங்கிக் கொட்டிக் கொள் வதற்கு. அது வைரம், வைடுரியம் போன்ற மிக விலையுயர்ந்த பொருள்களை வைத்துப் பாது காக்கும் பெட்டகம் போன்றதாகும். வயிற்றை அரிய பெட்டகமாகக் கருதி தேவையான வற்றை தேவையான அளவுக்கு உண்டு வந்தால் நோயில் லாமல் நீண்ட காலம் சுகமாக வாழலாம். வயி ற்றைக் குப்பைத்திட்டியாகக் கருதி கண் டதைக் கொட்டிக்" கொண்டால் நோய்க்கு ஆளாகி கொஞ்ச வயதிலேயே இறக்க நேரிடும்' என்று அவன் தாத்தா கூறியதைக் கூறி முடித் தான்.