பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



முன்னுரை

சிறுவர்க்கான சிறந்த நூல்கள் தமிழில் பெருமளவில் வெளிவராதது பெருங்குறையாகவே உள்ளது. மேனாடுகளில் சிறுவர் நூல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் அங்கெல்லாம் வளர்ச்சி விகிதமும் அதிகமாகவே இருக்கிறது.

இன்றைய சிறுவர்களே நாளைய பெரியவர்கள். நாட்டின் நாளை வளர்ச்சியும் வலிமையும் அவர்களைப் பொருத்தே அமைய முடியும். எனவே, இன்றையச் சிறுவர்களின் சிந்தனைக்கு உரமூட்டும் சிறந்த நூல்கள் பெருமளவில் வெளிவர வேண்டும். அந்நூல்கள் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் மன பண்பாட்டு வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைய வேண்டுவது அவசியம்.

அந்த உணர்வில்தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சேமிப்புப் பழக்கமும் சிக்கன உணர்வும் இளம் வயது முதலே ஏற்படவேண்டிய ஒன்று. அதன் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் காரண காரியங்களோடு உணரச் செய்வது அவசியம். அவ் வகையில் சிறுவன் அறிவானந்தம் மூலம் சிறு சேமிப்பின் முக்கியத்துவம் இக்கதையின் மூலம் நன்கு விளக்கப்படுகிறது.