பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 63

'இதைப் பார்க்கும்போது என் பாட்டி சொன்ன பழமொழிதான் என் நினைவுக்கு வருது.'

அதென்னடா பாட்டி சொன்ன பழமொழி' முருகு தூண்டினான்.

'கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுந்தம் போனானாம். இதைக் கேட்டுச் சிரித்த முருகு காளிமுத்தை நோக்கி,

"மிகப் பொருத்தமான பழமொழி. சிங்கா ரத்துக்கென உருவான பழமொழிடா'

முருகு கூறியதை காளிமுத்து ஏற்றுக் கொண் டான். அதோடு அவனும் ஒரு பழமொழியை எடுத்து விட்டான். 'ஆசை இருக்கு அரசன் ஆக, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்கனு எங்க தாத்தா அடிக்கடி பழமொழி சொல்வார். அது சிங்காரத்துக்குத்தான் பொருந்தும்' என்றான்.

இருவரும் சிங்காரத்தின் போக்கை நினைந்து சிரித்தவர்களாகப் பிரிந்து சென்றார்கள்.