பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விழா தந்த விழிப்பு

'அவனுக்கு என்னடா திடீர்னு. உடம் புக்கு ஏதாவது? அவசரமாகக் கேட்டான் சுந்தரம்.

'அவனுக்கு ஒண்ணுமில்லே'டா' அவன் அம்மாவுக்குக் கடுமையான நோய். முருகுவின் இந்தப் பதில் சுந்தரத்துக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் அவன் தாயின் நோய்பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டான்.

"சென்ற வாரம் அவன் அம்மாவைப் பார்த் தேன். நல்லாத்தானே இருந்தாங்க?' சுந்தரம் கேட்டான்.

நோய் அலாரம் அடிச்சுக்கிட்டா வரும்! திடீர்னு வர்றதுதான் நோய். முந்தாநாள் மளி கைக் கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வந்திருக்காங்க. வரும்போதே திடீர்னு வேர்த் திருக்கு. கொஞ்ச நேரத்திலே மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க. உடனே, ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்க. பல மணி நேரத்துக்கப்புறம் தான் நினைவு திரும்பிச்சாம். டாக்டர் எப் போதும் கூடவே இருந்து வைத்தியம் பார்க்கி றாராம். அறிவானந்தம் படுக்கை அருகிலேயே இருந்து அம்மாவைக் கவனிச்சுக்கிறான்."