பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விழா தந்த விழிப்பு

ருத்துவமனையின் நீண்ட கூடத்தில்

வரிசை வரிசையாகப் படுக்கைகள். அவற்றில் நோயாளிகள் படுத்தும் உட்கார்ந்து கொண்டும் இருந்தார்கள். அவர்கட்கு அருகில் உறவுக்காரர்கள் நின்று உதவி செய்தும் ஆறுதல் கூறிக் கொண்டும் இருந்தனர். அங்குமிங்கும் நர்ஸ்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அப் போது வருகையாளர்கள் வந்து போகும் நேர மாக இருந்ததால் கூடம் ஓரளவு கூட்டத்தோடு காணப்பட்டது. அக்கூடத்தை அடுத்திருந்த அறையிலிருந்த படுக்கையில் அறிவானந்தத்தின் தாயார் கண்களை மூடியபடி படுத்திருந்தார். அவர் உடலைப் பரிசோதித்த டாக்டர் வெளியே வந்தார். கவலை தோய்ந்த முகத்துடன் அறிவா னந்தம் அறைக்கு வெளியே நின்றிருந்தான்.