பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 71

டாக்டர் வெளியே வருவதைக் கண்டவுடன் கைகூப்பி வணங்கினான். அவர் அருகில் சென்று தழதழத்த குரலில் கேட்டான்:

'டாக்டர் சார் எங்கம்மாவுக்கு இப்ப எப் படி இருக்கு சார்?'

அறிவானந்தத்தின் கவலையை டாக்டர் புரிந்து கொண்டார். வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவினார். நம்பிக்கையூட்டும் வகை யில் புன்முறுவல் பூத்தார். அவன் தோளில் கை வைத்தபடி கூறினார்:

'இனிமேல் உங்கம்மாவுக்கு எந்த ஆபத் தும் இல்லை. விரைவில் சுகமாக எழுந்துவி டுவார். நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தெரி யுமா?' என்று கூறியவாறு அன்புடன் அவன் கன்னத்தில் மெதுவாகத் தட்டினார்.

“எங்கம்மா உயிரை கடவுள்போல் காப்பாத் திட்டீங்க சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ற துன்னே தெரியலே, சார் கண்களில் நீர்மல்க கரங்கூப்பி வணங்கியபடி கூறினான். கண் கலங்கி, நன்றி கூறும் சிறுவனின் செயல் டாக் டரைப் பெரிதும் இளகச் செய்துவிட்டது.