பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விழா தந்த விழிப்பு

'உம் பரவாயில்லையே, ரொம்ப நல்லா எழுதியிருக்கியே. இந்தா இதை நீயே வச்சுக்கோ. அம்மாவை விட்டு நகரக் கூடாது. ஏதவாதுன்னா உடனே வந்து சொல்லணும்' என்று கூறித் தாள்களைத் தந்துவிட்டு நகர்ந்தார்.

தன்னை அன்போடும் வாஞ்சையோடும் தட்டிக் கொடுத்த டாக்டரின் அன்பை நினைக் கும் போது அறிவானந்தத்துக்குப் பெருமையா கவும் பூரிப்பாகவும் இருந்தது. சிறிது நேரம் டாக்டர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந் தான். டாக்டர் உருவம் பார்வையிலிருந்து மறைந்தபின் தன் தாயார் படுத்திருந்த படுக்கை யை நோக்கி நகர்ந்தான்.

அறிவானந்தத்தின் தாயார் நோயாளியாகப் படுத்த படுக்கையாக இருப்பதாலும் அவரை அருகில் இருந்து கண்ணும் கருத்துமாக கவ னித்துக் கொள்ள வேண்டியிருப்பதாலும் அறிவா னந்தம் போட்டி எதிலும் கலந்து கொள்ள முடியாது - மாட்டான் என்ற செய்தி எப்படியோ காட்டுத் தீ போல் பள்ளியெங்கும் பரவிட்டது. இது முருகுவுக்கும் மற்ற நெருங்கிய நண்பர் களுக்கும் மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்

தது.