பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விழா தந்த விழிப்பு

இதைக் கேட்டவுடன் சேகர் பதறினான். அவனுக்கும் அறிவானந்தம் நண்பன்தான். அவன் மீது சேகருக்குப் பிரியம் மட்டுமல்ல; மதிப்பே உண்டு. அறிவானந்தத்தின் பண்பா டான போக்கு சேகருக்கு மிகவும் பிடிக்கும். எனவே, சற்று பதற்றத்துடனேயே கேட்டான் :

'அவனுக்கு என்னடா உடம்புக்கு? நல்லாத் தானே இருந்தான்?"

'அவனுக்கு ஒண்ணுமில்லேடா. அவன் அம்மாவுக்குத் திடீர்னு நோய் வந்து ஆஸ்பத்தி ரியில் இருக்காங்களாம். அவனும் அவங்க கூட வே இருக்கானாம்! மகிழ்ச்சியாகக் கூறினான் சிங்காரம்.

இதைக் கேட்டபோது சேகருக்கு ஒன்றும்

புரியவில்லை. மீண்டும் சிங்காரத்தை நோக்கிக் கேட்டான்:

'என்னடா, இது வருத்தப்பட வேண்டிய

செய்தியை சந்தோஷ செய்தி'யாகச் சொல்lயே?"

'உனக்கு வருத்தமான செய்தியாக இருக் கலாம். ஆனால், எனக்கு இது மகிழ்ச்சி தரும் செய்திதானே! நாளைக்குப் பேச்சுப் போட்டி