பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுரை

'பெரியவர்களுக்காக நாவல் எழுதுகிறவர்கள், சிறுவர்களுக்கும் சில நாவல்கள் எழுதலாமே என்று எழுதுவதில்லை. பெரியவர்களுக்காக நாடகம் எழுது பவர்கள் சிறுவர்களுக்கும் சில நாடகங்கள் எழுத லாமே என்று எழுதுவதில்லை. பெரியவர்களுக்குக் கட்டுரை எழுதுபவர்கள் சிறுவர்களுக்காகச் சில கட்டு ரைகள் எழுதலாமே என்று எழுதுவதில்லை. ஆனால், பெரியவர்களுக்காகக் கவிதை எழுதுபவர்கள், சிறுவர்க ளுக்காகச் சில கவிதைகள் எழுதுகிறார்கள். பிள்ளைக ளிடம் இரங்கும் கருணை உள்ளம் கவிஞர்களிடமே உள்ளது பிள்ளைகளே நாளைய பிரபஞ்சதை வாழ் விக்கப் போகிறவர்கள் எனும் உண்மையை உணர்ந்த வர்கள். அதனால்தான் பாரதியார், பாரதிதாசன், கவி மணி, வாணிதாசன், தமிழ் ஒளி முதலிய கவிஞர் பெரு மக்கள் பெரியோர்க்காக கவிதை புனைந்ததுடன் சிறி யோர்க்காகவும் கவிதைகள் புனைந்தார்.'

மேலே கண்டது பாவேந்தர் நூற்றாண்டு விழா வை ஒட்டி குமரி அனந்தன் ஒராண்டு நடத்திய பாவேந்தர் தொடர்ச் சொற்பொழிவுகளில் ஒரு வாரம் நான் பங்கு கொண்டபோது கூறிய கருத்து. இக் கருத்தைப் பொய்யாக்குவதற்காகவே ஒருவர் பிறந்தி ருக்கிறார் என்பதை அப்போது நான் உணரவில்லை. அவர்தான் மண்ணகம் முழுதும் அறிந்து போற்றும் அறிவியல் தமிழ் வித்தகர் மணவை முஸ்தபா

.%lᏊal fᎢē ©ᎥᎢ.