பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விழா தந்த விழிப்பு

“என்னடா சிங்காரம் இன்னிக்கு ரொம்பக் குஷியா இருக்கே? என்ன விஷயம்? இன்னிக்கு உங்க அம்மாவிடமிருந்து நிறைய காசு கறந் துட்டு வந்துட்டியா? சிங்காரத்தை நன்றாகத் தெரிந்திருந்த நண்பன் சந்திரன் கேட்டான்.

'இப்படி யாராவது கேட்க மாட்டார்களா? என்று ஏங்கியவன்போல் தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான். அவனை நோக்கிப் பெருமையான ஒரு பார்வை பார்த்தான்.

'நாளைக்கு நம்ம பள்ளிக்கூட ஹீரோ, நான் தான். இதை நாளைய விழாவிலிருந்து புரிஞ் சுக்குவே. அறிவானந்தத்தின் பரிசு ஆதிக்கம் நாளைக்குத் தகர்ந்து போகும்!"

சிங்காரத்தின் திடீர் அறிவிப்புக் கேட்ட சந்திரன் திகைத்துவிட்டான். இவனுக்கு எப்படி இந்தத் திடீர் வாழ்வு வந்தது என அதிசயித் தான். இவன் பேசுவதன் பொருள் என்னவாக இருக்கும்?' எனக் குழம்பினான்.

'என்ன, சிங்காரம் என்னவோ போலப்

பேசறே? நீ பேசறது எனக்குச் சரியாப் புரிய லியே