பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விழா தந்த விழிப்பு

காசையெல்லாம் தின்று தீர்த்திடlயே பேச்சுப் போட்டிக்குன்னு வந்து நிற்பியே தவிர, பேச மாட்டியே பேந்தப் பேந்த விழிப்பே அது தானே இதுவரை நடந்தது!"

சிங்காரத்தின் கடந்த கால நடைமுறை களைச் சுட்டிக் காட்டிப் பேசினான் சந்திரன்.

"அதெல்லாம் உனக்கு ஒண்ணும் புரியாது! நாளைக்கு நான் பரிசுகளை வாங்குவேன். அப் போ, உன் தேங்காய் மண்டைக்குத் தெளிவாகப் புரியும் நான் வர்றேன்,' எனப் புதிருக்கு விடை கூறாமலே நடையைக் கட்டினான் சிங்காரம்.

சிங்காரத்தின் பேச்சும் போக்கும் சந்திர னுக்கு மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வளவு நம்பிக்கையோடு பேசிவிட்டுப் போகிறான். p பூம்பா என்று ஏதேனும் மாய மந்திரம் செய்து பரிசுகளைப் பெறப் போகிறானா, என்ன? ஏதும் புலப்படாத நிலையில் சந்திரன் மனதில் ஒரு கருத்து மட்டும் உறுதியாகத் தலை தூக்கி நின் றது. அதுதான் சிங்காரத்தின் போக்கால் ஏதோ விபரீதம் நாளை நடக்கப் போகிறது என்பது.