பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ls)6 of 58)6] I முஸ்தபா 87

'சிங்காரம் நீ படிக்கிற தாள்லே இருக்கிற கையெழுத்து அறிவானந்தம் கையெழுத்துப் போல இருக்கே!' என்று கேட்டான்.

சுந்தரம் அவ்வாறு கேட்டது சிங்காரத் துக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குச் சற்று ஆத்தி ரமாகக் கூட இருந்தது.

"ஆமா ஊர்லே இருக்கிறவங்க கையெழுத் தெல்லாம் இவருக்குத்தானே ரொம்பத் தெரியும்! பேசாமப் போடா!' என வெறுப்பாகக் கூறி அவன்மீது எரிந்து விழுந்தான்.

சிங்காரம் ஆத்திரமும் கோபமுமாக இருந் தான். அவனோடு இனிப் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்தவனாக, "நீ எரிஞ்சு விழுகிறதி லேயிருந்தே, என்னமோ நடந்துக்கிட்டிருக் குன்னு புரியுது. நான் வர்றேன்,' என்று முணுமு ணுத்தபடியே விரைந்து நடந்தான்.

சிங்காரம் தொடர்ந்து மனப்பாடம் செய்

வதில் மும்முரமாக ஈடுபட்டான்.