பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

மணவையார் 1965இல் தென்மொழிகள் புத்தக டிரஸ்டில் பணியாற்றிய காலம் முதலே எனக்கு நன்கு அறிமுகமானவர். அதிலும் ஆற்றலும் அறிவியல் தமி ழார்வமும் பொங்கிப் பெருகும் கங்கையைப் போன்ற மணவையார் நான் மேல சொன்ன கருத்தை உடைத்து விதிக்கு ஒரு விலக்கு உண்டாக்கி விட்டார். மண வையார் கவிஞரல்லர்; ஆனால் சிறுவர்களிடம் பேரன்பும் அக்கறையும் கவிஞர்களுக்கே உண்டு என்று நான் கூறினேனே, அதைக் காட்டிலும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். இனி இந்த நாட்டை ஆளப் பிறந்த அரும்புகளுக்கு, அவர் ஆற்றிய தொண்டு பெரிது. குழந்தை எழுத்தாளர் என்னும் பட்டம் சூட்டிக் கொண்ட ஒருவர் சராசரியாக ஆற்றும் சிறுவர் இலக்கியத் தொண்டைவிட அதிகம் மிக அதிகம்!

மணவையார் முதலில் ஒர் அறிவியல்வாதி! அனைத்து அறிவியல் மூலங்களையும் கூறுகளையும் அன்னை தமிழில் அளிக்க முடியும் என்று சொல்லி, சொல்லியதைச் செயல்படுத்தி, அச்செயலில் மிகப் பெரிய வெற்றி பெற்றவர். மொழி பெயர்ப்புக் கலை யின் முடிசூடா மன்னர். அப்படிப்பட்டவர் தனது 'விசு வருப உருவை குறைத்துக் கொண்டு மறைத்துக் கொண்டு, ஆயர்கள் மத்தியில் ஆநிறை மேய்த்த மாயக் கண்ணன் போல எளிய வடிவம் எடுத்துக் கொண்டார். ஆம், குழந்தை எழுத்தாளரானார். அவர் எழுதிய வற்றைப் படித்துப் பார்த்தால், குழந்தை இலக்கியக் கோமான் ஆனார் என்று சொல்வதே பொருந்தும் தென்மொழிகள் புத்தக டிரஸ்டுக்காக நாற்பத்தி மூன்று