பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 95

'ஆனால், அந்தப் பேச்சு இந்த மாணவர் கைக்கு எப்படி வந்தது? ஒருவேளை அறிவானந் தமே இந்த மாணவரிடம் கொடுத்துப் பேசச் சொல்லியிருக்கலாம்.

'சிலர் சொல்வதுபோல் நடப்பதில்லை. ஆனால், ஒரு சிலர் அவ்வாறே வாழ்ந்து வெற்றி காண்கிறார்கள். இந்தப் பேச்சை எழுதிய அறிவா னந்தம் என்ற மாணவனின் வாழ்க்கையில் அண்மையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அது மற்றவர்கட்கு ஒரு பாடமாக மட்டுமல்ல; வழி காட்டும் நிகழ்ச்சியாக இருக்கக் கூடியதாகும்.

'அறிவானந்தம் என்ற அந்த மாணவரின் தாயார் திடீரென நோய்வாய்ப்பட்டார். கொடிய நோயானதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அந்தக் குறிப்பிட்ட கொடிய நோய்க்கு மிகவும் விலையுயர்ந்த மருந்து தேவைப்பட்டது. அம் மருந்து அப்போது மருத் துவமனையில் இல்லை. வெளியில் உடனடியாக வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது. அவர் களோ ஏழை. ஏழைத் தாயின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இதைக் கேட்ட அறிவானந்தம் எனும் அந்த மாணவன் தான் பள்ளி சிறுசேமிப்பு வங்கியில் சிறுகச் சிறுகப் பணம் போட்டு