பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 97

இதைக் கேட்டபோது எழுந்த கைதட்டல் ஒலி அடங்க நீண்ட நேரம் ஆகியது.

தலைவர் மேலும் தொடர்ந்தார்.

'இதற்கிடையே ஒரு வருந்தத்தக்க நிகழ்ச் சியைக் குறிப்பிட வேண்டியுள்ளது. இதை அறி விக்குமாறு தலைமையாசிரியர் என்னைக் கேட் டுக் கொண்டுள்ளார். '

இவ்வாறு தலைவர் கூறியவுடன் கூட்டத் தில் ஒரு விநாடி அமைதி நிலவியது. என்னவாக இருக்கும் என்ற திகைப்பு எல்லோர் முகத்திலும் தென்பட்டது. மர்மத்தைத் துலக்கும் வகையில் தலைவர் தொடர்ந்து பேசினார்.

'சிறந்த சேமிப்பாளன் என்பதற்கான பரி சைப் பெற ஒரு மாணவன் குறுக்கு வழியில் முயற்சி செய்திருக்கிறான். ஆண்டு முழுவதும் சேமிக்க முயலாத அந்த மாணவன் நேற்று திடீ ரென ஒரு பெருந் தொகையைக் கொண்டு வந்து பள்ளிச் சேமிப்பு வங்கியில் கட்டியுள்ளான். சந்தேகப்பட்ட ஆசிரியர், அப் பையனின் தந்தை யைக் கண்டு கேட்டார். அப்போதுதான் மேற்கூ றிய உண்மை வெளிப்பட்டது.