பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T0 8" - விவாகம்ானவர்களுக்கு - உபயோகிப்பது நல்லது. அந்த உறைகள் சரசரப்பாய் இருந்தாலும் பெண்குறிக்கு நோவு உண்டாக்கவோ தீங்கு இழைக்கவோ செய்யா. உறைகளில் பல தினுசுகள் உள. ஆனல் விலையுயர்ந் தவை வேண்டுமென்பதில்லை. அதிலும் நம் நாட்டு மக்கள் ஏழைகள். அதல்ை அதிக விலையில்லாத பாரகான்பிர்ெண்டிப்-லாம்பட்-ரப்பர் உறை போன்றவை போதும். அதில் நீளத்தைப் பொறுத்து மூன்று அளவுகள் உண்டு. எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம், எல்லா வற்றுக்கும் விலை ஒன்றுதான். ஹாவ்லக் எல்லிஸ் என்ற காதல் நூல் பேராசிரியரும், பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் வைத்தியராயிருந்த டாஸன் பிரபுவும், கல்கத்தா பிரஸ்வ ஸ்பத்திரி பிரதம வைத்தி யரான ஆர்மிட்டேஜூம் இவர்களைப்போல் இன்னும் பல ஆசிரியர்களும் பண்டிதர்களும் ரப்பர் உறையே தான் கர்ப்பத் தடைச் சாதனங்களில் தலை சிறந்தது என்றும் நூற்றுக்கு நூறு நிச்சயமாகப் பலன் தரும் என்றும் கூறு கிரு.ர்கள். உறையை மாட்டுவதில் கஷ்டம் கிடையாது. எந்த விதமான தீமையும் செய்வதில்லை. விலையும் சொற்பம். எங்கும் கிடைக்கும். ஒருமுறை மட்டும் உபயோகிக்கும் வெங்காயத் தோல் போன்ற மெல்லிய உறைகளை வாங்கு வதைவிடக் கட்டியான உறைகளை வாங்குவதே நல்லது. அவைகள் ஆறுமாதம் வரை உழைக்கும். விந்து பெண் குறியில் விழுந்த பிறகு அதிலுள்ள_சுக்கில உயிர்களைக் கொல்லவும், கர்ப்பப்பைக்குள் போகவொட்டாமல் தடுக் கவும் முயல்வதைவிட, விந்தைப் பெண்குறியில் விழாத படி பார்த்துக் கொள்வதே சுலபமானதும் நிச்சயமாகப் பலன் அளிக்கக் கூடியதுமாகும். அதுவுந் தவிர மண வாழ்க்கையின் ஆரம்பத்தில் கர்ப் பத் தடைக்காக உபயோகிக்கக்கூடிய சாதனம் இது ஒன்று தான். கன்னியின் பெண்குறியிலுளள ஜவ்வு கிழி பட்டுப் புண்ணுகும்போது, மற்ற சாதனங்கள் எதுவும் கஷ்டமே த்ரும் ஜவ்வு கிழிந்து புண் ஆறியபின்பே அவைகளை உப யோகிக்க முடியும்.