பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二遭20 es- விவாகமானவர்களுக்கு ജ്ജമ്മ பட்டதே அதிகமாக அமுக்கக் கூடியதாயும், நன்ருய்ச் சுத் தமாக்க்க் கூடியதாயும், வேகவைத்தால் கெடாததாயும், அதிக மிருதுவானதாயும் இருக்கின்றது. இந்த ரப்பர் பஞ்சையும் பெண்குறியில் வைத்தால் நோவு உண்டாகாத அளவு பெரிதாக வெட்டி எடுத்து, அதன் நடுவில் ஒரு சிறு பள்ளம் உண்டாக்கி, ஒரு நூலும் கட்டி, சாதாரணப் பஞ்சைத் தோய்த்தது போலவே தேன் முதலிய ஒன்றில் தோய்த்துப் பெண்குறிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில்தான் எடுக்க வேண்டும். எடுக்குமுன் டுஷ்கொண்டு பெண்குறியைக் கழுவிக்கொள்ளுதல் நல்லது. அதைக் காலையில் எடுத்த பின் .உப்பு ஜலத்தில் இரண்டு நிமிஷ நேரம் வேகவைக்க வேண்டும். அல்லது ஒரு பைண்டு ஜலத்தில் ஒரு தேக்கரண்டி போரிக் ஆஸிட் பவுடரைக் கரைதது அதில் பஞ்சைப் போட்டு நன்ருய் அலசிப் பின் சுத்த ஜலத்தில் கழுவி உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் ஸ்டோப்ஸ் இந்த முறையை நிரம்பச் சிலாகிக் கின்ருர். ஆனல் கோனிக்கோவ் என்னும் ருஷ்ய வைத்திய ஆராய்ச்சியாளர் இது அவ்வளவு நம்பிக்கையான தன்று என்று கூறுகின்ருர். சரியான அளவில் எடுத்து சரியானபடி காப்பப்பை வாயில் பொருத்திக்கொண்டால் நல்ல சாதனம்தான். ஆனல் எல்லோராலும் அப்படிச் செய்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ரப்பர் மூடிகள் இந்த மாதிரி கர்ப்பப்பை வாயிலை எலுமிச்சம்பழம், பஞ்ச், கடற் பஞ்சு, ரப்பர் பஞ்சு முதலியவைகளைக்கொண்டு மூடுவதை ஆதாரமாக வைத்து ಶ್ಗಗ್ಗಿ!!! *பெலாரிகள்' என்னும் ரப்பர் மூடிகளைத் தயாரித்துளர். அவைகளில் முக்கியமானவை டாக்டர் ஸ்டோப்ஸ் .சிபார்சு செய்யும் ப்ரோரேஸ் கெக் பெசாரி: (Prorace Check Pessary)யும், நார்மென் ஹே , ஹார்னி புரூக் முதலி யோர் சிபார்சு செய்யும் டச்பெஸ்ாரி' (Dutch Pessary)யும் ஆகும்.