பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 21 ஸ்டோப்ஸ் கூறும் செக் பெலாரி கர்ப்பப்பையின் கழுத் த்தில் பொருந்தியிருக்கும் ஒரு சிறு ரப்பர் தொப்பி; அதன் விளிம்பு கட்டியாக இருக்கும். அது கர்ப்பப்பையின் கழுத் துக்குத் தக்கபடி பல அளவுகளில் கிடைக்கும். அவற்றுள் எது சரியாகப் பொருந்துமோ அதைத் தேர்ந்து கொள்ள வேண்டும். சிறிதாக இருந்தால் பொருந்தாது, பெரிதாக இருந்தால் சம்போக சமயத்தில் கழன்று போகும். அதைப் பெண் குறிக்குள் நுழைப்பதற்கு முன் அதன் உட்பக்கத்திலும் வெளிப்பக்கத்திலும் நல்ல களிம்பு தடவ வேண்டும். இந்தத் தொப்பியை மாலையிலேயே பொருத்தி வைத்துக்கொள்ளலாம். அதை உள்ளே வைத்துவிட்ட்ால் அது இருப்பதான உணர்ச்சியே தோன்ருது. சம்போகம் முடிந்ததும் அதை எடுந்து விடாமல் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது பெண்குறியினுள்ளேய்ே இருக்கும்படி விட்டுவிடவேண்டும். இரண்டு மூன்று நாட்கள் உள்ள்ே இருப்பது நல்லது என்று ஸ்டோப்ஸ் கூறுகிரு.ர். மறுநாள் எடுத்துக்கழுவி பிரஞ்சு சாக் பவுடர் தடவி வைத்துக்கொள்ளவேண்டும். அடிக்கடி சம்போகம் செய்ப வர்கள் இரண்டு தொப்பிகள் வாங்கி வைத்துக்கொள்ளுதல் நல்லது. கர்ப்பப்பை வாசலில் வேறுபாடோ பழுதோ ஏற் படாத சாதாரணமான பெண்களுக்கு இதுவே சிறந்த கர்ப்பத்தடை சாதனம் என்றும், ஆனல் கர்ப்பப்பையில் பழு துண்டா இல்லையா என்று தானக அறிந்துகொள்ள் முடியாதாகையால் பெண்ணுனவள் ஆரம்பத்தில் இது விஷயம் ஆறிந்த டாக்டரிடத்தில் காட்டி அறிந்துகொள்ளு தல் அவசியம் என்றும், டாக்டர் பழுதில்லை என்று கூறிஞ் லும் அவள் குழந்தை பெறுவாளானல் அதன்பின் ԼDՈ/ படியும் டாக்டரிடம் கேட்க வேண்டியது அவசியம் என்றும், குழந்தை பிரசவமாகும் பொழுது கர்ப்பப்பையின் கழுத்தில் கீறல் ஏற்பட்டிருந்தால் அது ஆறிக் குணமாயிருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு இந்த செக் பெஸாரிக்குப் பதிலாக டச் பெலாரி'யே தேவை என்றும் ஸ்டோப்ஸ் அம்மையார் கூறுகிரு.ர். - வி. ஒ-8