பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 - விவாகமானவர்களுக்கு - ஆகவே, கர்ப்பப் பைக் கழுத்தில் விசேஷ வேறு பாடுகள் ல்லாத சாதாரணமான பெண்களுக்கு மட்டுமே 'செக் பலாரி' ஏற்றதாகும். அவர்களுக்கும் ஆதியில் டாக் டருடைய உதவி தேவையாகும். டாக்டர் கர்ப்பப்பையில் பழுதில்லை என்று கூ சரியான அளவுள்ள பெஸாரியைத் தேர்ந்து தந்தாலும் பெண்ணின் விரல்கள் கட்டையாகவும் பெண்குறி ஆழமாகவுமிருந்தால் அந்தப் பெண்ணுல் அந்தப் பெலாரியைப் பொருத்தி வைத்துக் கொள்ள முடியாது. டச் பெஸாரி” செக் பெஸாரியைப் போல் கர்ப்பப் பையின் கழுத்தில் பொருந்தாமல் பெண்குறியின் பின் பாகத் தைச் சிறிது விரித்து அந்த அமுக்கலால் அசையாமல் இருந்து கொண்டு விந்தை கர்ப்பப்பை வாசலுக்குள் போகவொட் டாமல் தடுக்கின்றது. இதுவும் தவருமல் பலன் தரவேண்டுமானல் (1) சரி யான் அளவாகவும் இருக்க வேண்டும்; (2) அணுவளவு கூட துவாரம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். ஆதலால் இந்தப் பெலாரி விஷயத்திலும் ஆரம்பத்தில் டாக்ட்ர் உதவி அவசியமாகத் தேவையாகும். அளவு பெரிய தாயிருந்தால் பெண்குறியில் நோவு உண்டாகும். சிறிதாக இருந்தால் இடம் விட்டு நழுவி பிரயோஜனப் படாமல் போகும். கன்னிக்குச் சரியாக இருக்கும் அளவு குழந்தை பெற்றவளுக்குச் சரியாயிராது. குழந்தை பெறப்பெற அளவு பெரிதாய்க் கொண்டே இருக்கும். உபயோகிக்குமுன் துவாரம் உண்டா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அதில் நல்ல களிம்பு உள்ளும் புறமும் பூசியே பெண்குறிக்குள் வைத்துக் கொள்ள் வேண்டும். சம்போகம் முடிந்ததும் எடுக்காமல் மறுநாட் காலையிலேயே எடுக்க வேண்டும். ஆனல் 12 மணி நேரத் திற்கு அதிகமாக உள்ளே தங்க விடலாகாது. மறு நாட் காலையில் எடுக்கு முன்பும் எடுத்த பின்பும் விஷநாசனி மருந்து கரைத்த ஜலம்கொண்டு டுஷ் மூலம் பெண்குறியை நன்ருய்க் கழுவவேண்டும். அதன்பின் ப்ெஸாரியை சேர்ப்பும் ஜலமும் கொண்டு நன்ருய்க் கழுவி, உலர்த்தி, பிரஞ்சு சாக் பவுடர் பூசிப் பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டால் அது மூன்று மாதங்கட்க உபயோகப்படும்.