பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - விவாகமானவர்களுக்கு - சுக்கில உயிர் இஞ்செக்ஷன் நமக்கு சுரம் வருகிறது, குணமாகிறது. ஆனல் அது மறு

படியும் வராது என்ருே வந்தாலும் அபாயம் உண்டா

காமல் முன்போல் போய்விடும் என்ருே சொல்ல முடியுமா ? (Քւգ Ամո 51 ஆனல் வைசூரி கண்டவர்களுக்கு அது மறுபடியும் வருகிறதுமில்லை. வந்தாலும் அபாயம் உண்டாக்குவது மில்ல்ை. இது எல்லோரும் அறிந்த விஷயம். இந்தப்படி வைசூரி விஷயத்தில் நடக்கக் காரணம் யாது ? நம்முடைய உடம்பிலுள்ள இரத்தத்தில் சிவப்பு உயிர்கள், வெள்ளை உயிர்கள் என்று இரண்டு விதமான நுண்ணுயிர்கள் உள. சிவப்பு உயிர்கள் உடம்புக்கு போஷணை தரும்; வெள்ளை உயிர்கள் விஷ உயிர்கள் வந்தால் அவை களைக் கொன்று உடம்பைப் பாதுகாக்கும். ஆதலால், வைசூரி நோய்க் கிருமிகள் உடம்பினுள் முதல் தடவையாகப் புகுந்தால் உடனே அவைகளுக்கும் உடம்பிலுள்ள வெள்ளே உயிர்களுக்கும் போர் நடைபெறுகிறது. நோய்க் கிருமிகள் விஷத்தை உண்டாக்கி உயிரைக் கவர முயல்கின்றன. ஆப் பொழுது உடம்பு வெள்ளை உயிர்களுக்குத் துணையாக விவு மாற்று உயிர்களைச் சிருஷ்டிக்கிறது. வெள்ளே உயிர்களும் விஷம்ாற்றுயிர்களும் சேர்ந்து நோய்க் கிருமிகளையும் விஷங் களையும் அழித்து விடுகின்றன. நோயாளி குணமடைந்து விடுகின்ருர். * = வெள்ளை உயிர்களுக்குத் துணையாகச் சிருஷ்டிக்கப்படும் விஷமாற்றுயிர்கள் நோய்க் கிருமிகளைக் கொண்றதும் இறந்து போய் விடுவதில்லை. அநேக வருஷங்கள் வரை உயிரோ டிருந்து மறுபடியும் வைசூரி நோய்க் கிருமிகள் உடம்புக்குள் நுழையுமானல், அவைகளை எதிர்க்கத் தயாராக இருந்து, அவைகள் நுழைந்த வுடனேயே கொன்று தீர்த்துவிடும். அதல்ைதான் ஒரு தடவை வைசூரி வந்து உயிர் தப்பியவர் களுக்கு மறுமுறை வைசூரியால் அபாயம் உண்டாவதில்லை. ஆளுல் முதல் தடவையாக வைசூரி காண்பவர்கள் எல்ல்ோரும் உயிர் தப்பி இந்தப் பாதுகாப்பைப் பெற்று விடுவதில்லை. ஆதலால் இந்தப் பாதுகாப்பை வைசூரி காணு முன்பே உண்டாக்கி வைத்துக்கொள்வது நல்லது. அதற்காக