பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 罩5岳 நான் கூறிய 15 முறைகளையும் (1) அனுகூலமில்லாத முறைகள் . (2) அனுஷ்டானத்திலுள்ள முறைகள் . (3) ஆராய்ந்து வரும் முறைகள் . என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். அந்த மூன்றுள் முதல் வகையில் அடங்குவன : - (1) பிரம்மசரியம் . (2) கர்ப்ப மாகாத காலம் . (3) கர்ப்ப மாகாத சம்போகம் . (4) விந்தை வெளியாக்கும் பயிற்சிகள் . (5) பெண் குறி கழுவும் டுஷ் முறை . இரண்டாவது வகையில் உள்ளவை : - (1) ஆப்பரேஷன் . (2) ஆண்குறி உறைகள் . (3) மாத்திரை - களிம்பு - நெய் - தேன் . (4) கர்ப்பப்பை மூடிகள் . (5) கலப்பு முறை (உறை - களிம்பு அல்லது மூடி - களும்பு) - மூன்ருவது வகையில் சேர்வன : - (1) கிராபன் பெர்க் வளையம். (2) எக்ஸ் - ரே - (3) சுக்கில உயிர் இஞ்செக்ஷன் . (4) ஹார்மோன் இஞ்செக்ஷன். (5) பீஜப்பையைச் சூடாக்கல் . முதல் வகையில் உள்ளவற்றில் சில அசாத்திய மானவை, சில அனுகூலமில்லாதவை, சில தீங்கு செய்வன. ஆதலால் அவற்றை யாரும் நம்பிக்கையாளுவது கூடாது. அவற்றுள் டுஷாம், கர்ப்பமாகாத காலமும் தனியாக உபயோகிக் காமல், பயன் தரும் வேறு முறையோடு சேர்த்து, உபயோ கித்தால் நன்மையுண்டு. விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து பயன் தரக்கூடியவை, தீங்கு செய்யாதவை என்று கண்ட இரண்டாவது வகையி லுள்ள ஐந்து முறைகளே இப்பொழுது அனுஷ்டானத்தில்