பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 - விவாகமானவர்களுக்கு - குப் பதிலாக தேனையும் வேப்பநெய்யையும் உபயோகிக்கவும் செய்யலாம். சம்போக சமயத்தில் உறை கிழிந்து போகுமானல் உடனே சீனிச்காரமோ கறியுப்போ கரைத்த ஜலம் கொண்டு டுஷ் மூலமோ கெண்டி மூலமோ பெண்குறியைக் கழுவிவிடவேண்டும். - ஆண்குறி உறையைவிடப் பெண்குறி மூடியே நல்லது. ஆனல் அதை நம் நாட்டு மக்கள் உபயோகிக்க முடியாமலி ருக்கும் காரணங்களை மேலே கூறினேன். மூடியை உபயோ கிக்க வேண்டுமானல் அது விஷயத்தை நன்கு அறிந்த டாக் டருடைய உதவி இன்றியமையாது வேண்டப்படுவதால் அத்தகைய உதவி பெறக் கூடியவர்கள் மட்டுமே மூடியை உபயோகிக்கலாம். ஏதோ ஒரு நர்ஸ் இந்த அளவு மூடியை இன்னவிதமாக உபயோகிக்கச் சொன்னல் என்று உடனே மூடி முறையை அனுஷ்டிக்க ஆரம்பித்து விடலாகாது. விஷயமறிந்த டாக்டருடைய உதவி கிடையாதவர்கள் உறையைத்தான் உபயோகிக்கவேண்டும். (2) மேலே கூறிய 10 நாட்கள் தவிர இதர நாட்களில் உறை வேண்டியதில்லை, பெண் குறிக்குள் தேனே, வேப்ப நெய்யோ அல்லது களிம்போ நிறைச் செலுத்திக் கொண்டு சம்போகம் செய்யலாம். ஆயினும் பஞ்சை பந்துபோல் உருட்டி இவைகளில் தோய்த்து கர்ப்பப்பை வாயிலை அடைக்கும்ப்டி வைத்துக்கொண்டு சம்போகம் செய்வதும், மறுநாட் காலையில் பஞ்சை எடுக்குமுன் டுஷ் மூலம் கழுவிக் கொள்வதும் நல்லது. - பெண்களுக்கு 40, 45-வது வயதுவந்ததும் மாதம்தோ றும் 30 வருஷ் காலமாக வந்துகொண்டிருந்த மாதவிடாய் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து. ஐந்தாறுமாத காலத்தில் அறவே நின்று போகிறது. இதைக் கண்டதும் கர்ப்பத்தடையை உபயோகிக்கும் பெண்கள் இனிக்குழந் தைகள் உண்டாக என்று எண்ணி அப்படி உபயோகிப் பதை நிறுத்திவிடுகிருர்கள். அது தவறு. மாதவிடாய் நின்று விட்ட போதிலும் மூன்று வருஷங்கள் வரை முட்டைகள் உற்பத்தியாகிக் கொண்டிருக்குமாதலால் மாதவிடாய் அறவே நின்று மூன்று வருஷங்கள் கழியுமட்டும்_கர்ப்புத் தடை முறைகளைக் கையாள வேண்டியது அத்தியாவசிய மிாகும்.