பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 145 மணமகனிடம் சக்திவாய்ந்த சந்தான விருத்தி செய்யச் சொன்னரா அல்லது சக்தியற்ற குழந்தைகளைப் பீச்சும்படி கூறினரா? இக்காலத்தில் வேண்டுவது ஏராளமான குழந்தைகள் அல்ல, எல்லாவிதமான சக்திகளும் பொருந்திய குழந்தை களே ஆகும். அத்தகைய குழந்தைகளைப் பெறுவதே ஆண்ட வனுடைய திருவுளப்படி நடப்பதும் ஹிந்து கிறிஸ்தவ திரு மண்ச் சடங்கின் உண்மையான பொருளை நிறைவேற்று வதுமாகும். வெஸ்டன் என்னும் நகரத்துப் பெரிய பாதிரியார் ரெவரெண்டு மாக்கிஸ்டர் என்பவர் - கிறிஸ்தவ மனத் தின் பிரதம் நோக்கம் மக்கட்பேறே என்பதில் சந்தேக மில்லை. ஆனால் குழந்தையைக் கவனித்துக்கொள்ளத்தாயால் முடியாமலும், குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பணம் தேடத் தந்தையால் முடியாமலுமிருக்கும் பொழுது குழந் தையைப் பெறுவது அடாத காரியம்; நமக்கு வேண்டியது நல்ல மக்கட்பேறேயன்றி, அதிகமான மக்கட் பேறன்று' -என்று கூறுகின்ருர். இதைக் தானே நமது வள்ளுவப் பேருமானும் இரண் டாயிரம் வருடங்கட்கு முன்னமேயே - பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற என்று கூறினர். மக்கட் பேற்றைப் போல உயர்ந்த பேறு வேறு கிடையாது. ஆனல் அதுவும் அறிய வேண்டியவற்றை அறிந்த நன்மக்கட் பேருயிருந்தால்தான். கிறிஸ்தவ மதச் சட்ட நிபுணரான டாக்டர் பெர்ளிட் ரீமர் என்னும் பாதிரியார் - கிறிஸ்துவ மதஸ்தாபனங்கள் கண்டிப்பது கர்ப்ப்த்தடையையன்று கர்ப்பத் தடைமுறை களில் சில்வற்றையே. ஆல்ை ஏற்ற முறை எது என்பதை விஞ்ஞான ரீதியர்கத் தீாமானிக்க வேண்டுமேயன்றி பழைய மத நூல்களைக் கொண்டன்று - என்று கூறுகின்றர். 1931 - ம வருஷம் லாம்பெத் என்னுமிடத்தில் கூடிய அகில பிரிட்டிஷ் ப்ாதிரிமார் மகாநாட்டார். சில சந்தர்ப்பங் களில் கர்ப்பத்தடை அனுஷ்டானம் சன்மார்க்கத்திற்கு விரோதமேயில்ல்ை என்று தீர்மானித்தார்கள்.