பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - விவாகாமானவர்களுக்கு - இன்னும் லண்டன் பெரிய பாதிரியார் டீன் இஞ்ச் போன்ற கிறிஸ்துவ மதாச்சாரியர்கள் பலரும் கர்ப்பத் தடை அவசியத்தையும் முறைகளையும் ஆதரிக்கவே செய் கிரு.ர்கள். ரோமன் கத்தோலிக் மதமும் கர்ப்பத்தடையின் அவ சியத்தை உணர்ந்து, கர்ப்பந்தரியாத நாட்களில் சம்போகம் செய்யுமாறு யோசனை கூறுகின்றது. ஆனல் கர்பந்தரியாத நாட்கள் இவை என்று அறிந்து கொள்வதிலுள்ள கஷ்டங் களை நாம் அறிந்து கொண்டோம். குழந்தை பெருமல் சம்போகம் செய்யலாமானுல் குழந்தை பெருமலிருப்பதற்கு எந்த வழியை அனுஷ்டித்தால் என்ன? அதிலும் நிச்சயமான நல்ல வழிகளை அனுஷ்டிப்பதல்லவோ நல்லது? இஸ்லாம் என்ன கூறுகின்றது? அராபியர்கள் எகிப்து தேசத்தை ஜெயித்து அரசாள் ஆரம்பித்த காலத்தில்: எகிப்தின் முதல் அரேபிய அரசராயிருந்த அமீர் இஷன் ஆன் என்பவர் தலைநகராகிய கெய்ரோவிலுள்ள பெரிய மசூதியில் செய்த பிரசங்கத்தில் ஜனங்கள் எச்சரிக்கையா யிருக்க வேண்டும் என்று கூறிய நான்கு விஷயங்களில் அதிக மாகக் குழந்தைகளைப் பெறலாகாது என்பதும் ஒன்ருகும். ஆகவே இஸ்லாம் மதமும் கர்ப்பத் தடைக்கு விரோத மான தன்று. சிலவருஷங்கட்கு முன்னர் ஆல் பலா என்னும் ஆகிப்திய பத்திரிகை, அரசாங்கம்.கர்ப்பத்த்டையைப் பர்வச் இசய்வதற்காகச் சட்டம் ஒன்றைச் செய்யவேண்டும் என்று இஸ்லாம் மத நூல்களிலிருந்து ஏராளமான மேற்கோள் களுடன் ஒரு கட்டுரை எழுதிற்று. இந்த விஷயத்தை முதல் முதலாக_ எகிப்தில் எழுப்பியவர் ஷேக் அகமது பே இப்ராஹிம் என்னும் அறிஞராவார். அவரும் கர்ப்பத்தடை இஸ்லாம் மத நூல்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதே என்று கூறுகிரு.ர். - ஆகவே கர்ப்பத்தடை எந்த மதத்துக்கும் விரோத மில்லை என்பதும் கர்ப்பத்தட்ை முற்ைகளை அனுஷ்டித்து நல்ல குழந்தைகளைப் பெறுவதே அவற்றின் உட்பொருளை அறிந்து நடப்பதாகும் என்ப்தும் தெளிவாகின்றது.