பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 3 வளமுடையவளா யிருந்தாள். இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்கள் உலக ஜனங்கள் அனைவர்க்கும் போதுமானவை என்று முந்நூறு வருஷங்களுக்கு முன் வந்த ஆங்கில அறிஞர்கள் கூறியுளர். ஆம், நம் அன்னை அகில லோகத்திற்கும் ஆகாரமளிக்கும் அன்ன பூரணியா யிருந்தாள். ஆனல் இப்பொழுது அவள் நிலைமை என்ன ? இந்தி யாவைப் போல் எளிய தேசம் எங்குமில்லை என்பது உலக மறிந்த விஷயமாய்விட்டது. எங்கு பார்த்தாலும் தரித் திரம் என்பது மட்டுமன்று; தரித்திரம் நாளுக்கு நாள் அதிகமாக வளர்ந்து பெருகிக்கொண்டே போகின்றது என்பதும் உண்மையாகும். பாரத தேவி எல்லாவிதச் செல்வங்களையும் இழந்துவிட்டாலும் அவளுக்குப் புத்திர சம்பத்தில் மட்டும் குறைவொன்று மில்லை. சைனவைத் தவிர வேறு எந்த நாட்டில் 40 கோடி மக்கள் உளர் ? நமது விருந்தாளிகள் பாரத தேவியின் மக்கள் சுமார் 40 கோடி, சரிதான். ஆனல் அவள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் எத்தனை பேர் ? சர்க்கார் 10 வருவுங்களுக்கு ஒருமுறை ஜனத் தொகையைக் கணக்கிடுகின்றனர். 1921 - ம் வருஷத்தில் 32; கோடியாக இருந்த ஜனங்கள் 1931 - ம் வருஷத்தில் 35}கோடியாய்ப் பெருகி 1941 -ல் 40 கோடியாக யிருக்கிரு.ர்கள். ஆகவே 20 வருஷ காலத்தில் 7; கோடி ஜனப் பெருக்கம். அதாவது வருஷத்துக்கு 37; லட்சம்; மாதம் 3 லட்சத்துக்கும் அதிகம். அகவே தினசரி வரும் விருந்தாளிகள் 10 ஆயிரத்துக்கும் அதிகம். ஒரு நாளைக் குச் சொல்வானேன் ? ஒரு நிமிஷத்துக்கு எத்தனை பேர் ? 7 பேருக்கு அதிகம். நிமிஷத்துக்கு 7 விருந்தாளிகளா ? இதுபோலொத்த விருந்து வெள்ளம் யாரும் காண முடியுமோ ? பாரத தேவியின் இந்த விருந்தாளிகள் யார் ? சாதா ரணமாக நமது வீடுகளில் விருந்தாளிகள் வருவர், சில நாள் தங்குவர், பிறகு போய்விடுவர். விருந்தாளிகள் யாரும் ஸ்திரமாகத் தங்கிவிடுவதில்லை. குடும்பத்தோடு குடும்பமாக ஐக்கியமாய் விடுவதில்லை. ஆனால் பாரத தேவியின் விருந்தாளிகளோ அப்படிப்பட்டவர்கள் அல்