பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 - விவாகமானவர்களுக்கு - டுப் போகும் என்று பயப்படுகிருர்கள். ஆனல் எந்த டாக்ட ரும் இதை ஒப்புக்கொள்வார் என்று தோன்றவில்லை. 1922-ம் வருஷம் லண்டனில் நடைபெற்ற 5-வது சர்வ தேசக் கர்ப்பத்தடை மகாநாட்டார் 'சரியான கர்ப்பத் தடைச் சாதனங்களை உபயோகித்தால் சுகவீனமோ மலட் டுத் தன்மையோ உண்டாகும் என்பதற்கு யாதொருசான்று மில்லை' என்ற தீர்மானத்தை நிறுைவேற்றினர்கள். அதற் குச் சாதகமாயிருந்த டாக்டர்கள் 164 பேர். மூன்று பேர் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் கர்ப்பத்தடை அனு ஷ்டா னத்தால் நரம்புக் கோளாறுகள் உண்டாகலாமோ என்று எண்ணுகிரு.ர்கள். ஆனல் அதுவும் தவறு. கர்ப்பம் உண்டாகிவிடுமோ என்று பயந்து பயந்து சம்போகம் செய்பவர்க்கே நரம்பு சம்பந்த மான நோய்கள் உண்டாகும். கர்ப்பத்தடை உபயோகிப்ப வர்களுக்கு அந்தப் பயம் கிடையாதாகையால் அவர்கள் தைரியமாயும் சந்தோஷமாயும் சம்போக இன்பம் துய்ப்பர். அதல்ை அவர்கட்கு நரம்புநோய்கள் எதுவும் உண்டாகக் காரணமில்லை. இன்னும் அநேக பெண்கள் நோயா யிருக்கும் பொழுது சம்போகம் செய்து குழந்தை உண்டாய் விடுகின்றனர். அப்படிப்பட்டவர்க்கு அவர்களுடைய நோய் அதிகமாகி மிகுந்த தீமையை விளைவித்து விடுகின்றது. கூடியரோகம், போன்ற வியாதியுள்ளவர்கள் கர்ப்பமுற்ருல் அந்த ரோகம் அவர்களைச் சீக்கிரத்தில் கொன்று. தீர்த்துவிடுகின்றது. அல்லது இப்படி நோயுள்ளவர்கள் சம்போகம் செய்து கருத் தரித்துவிட்டிால் கருவைச் சிதைக்க ஆரம்பித்து விடுகிருர் 'கள், அதனால் உண்டாகும் தீம்ை அதை விட அதிகமாகும், ஆனல் இவர்கள் கர்ப்பத்தடையை மட்டும் கையாள்வார். களால் இந்த விதமான கஷ்டங்கள் எதுவும் அனுபவிக்க வேண்டிய அவசியமே கிடையாது. - இன்னும் பெண்கள் அடிக்கடி கர்ப்பமுற்றும், அடுத் தடுத்துக் கர்ப்பமுற்றும் ஆரோக்கியம் குன்றி அகாலத்தில் கிழவிகளாய் விடுகிருர்கள். சிலர் அகாலத்தில் இறந்தும் ப்ோகின்றனர். அவர்களுடைய குழந்தைகளும் ஆரோக்கிய மில்லாமல் பிறந்து, ஆரோக்கியமில்லாமல் வளர்ந்து கஷ்டப்படுகிருர்கள். அநேக குழந்தைகள் இளம் பிராயத் திலேயே ம்ரித்து விடவும் செய்கின்றள. ஆனால் இந்தப்