பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.56 - விவாகமானவர்களுக்கு - ஜனத்தொகை சுருங்கல் எல்லோரும் கர்ப்பத் தடையை அனுஷ்டித்தால் குழந்: தைகள் பிறப்பது குறைந்து மனித ஜாதி அழிந்து போக லர்மே என்று சிலர் கேட்கிருர்கள். அப்படியால்ை இவர்கள் பெண்களுக்குக் குழந்தை வேண்டுமென்ற ஆசை இல்லாமலே போய்விடும் என்று எண்ணுகிருர்களா? அல்லது பிறப்பு குறைந்தாலும் இறப்பு இப்பொழுதுள்ளது போலவே இருக்கும் என்று எண்ணு கிருர்களா? மக்கட்பேற்றில் ஆசை குறைந்தாலும், ஜன்ன விகிதம் குறைந்து மரண விகிதம் குறையாமல் இருந்தால் தான் மனித ஜாதி அழிந்துபோகக் கூடும் என்று அஞ்சலாம். ஆனல் இந்த இரண்டு அபிப்பிராயங்களும் தவருனவை. ஜீவராசிகள் அனைத்துக்கும் அழிக்க முடியாத இரண்டு ஆசைகளில் மக்கட் பேற்றிலுள்ள ஆசையும் ஒன்று என்று முன்னமேயே கண்டோம். அதனுல்தானே குழந்தை உண் டானல் உயிருக்கு ஆபத்து நேரிடக் கூடும் என்று டாக் டர்கள் பெண்களிடம் சில சமயங்களில் கூறினால், அதைக் கேட்டதும் அவர்கள் சரி, குழந்தை வேண்டாம் என்று எண்ணமல் அதிகமான துக்கத்தை அடைகிருர்கள் என்பது எல்லோருக்கும் சர்வ சாதாரணமான அனுபவம். 'ஐயா! குழந்தை உண்டாகக் கூடாது என்று கூரு தீர்கள், ஆபத்தில்லாமல்குழந்தை பெறும் மார்க்கத்தைக்கூறுங்கள்" என்று டாக்டரிடம் பரிதாபமான குரலில் வேண்டிக் கொள்கிருர்கள். : - அதுபோலவே எத்தனை பெண்கள் மலடாயுள்ளவர்கள் குழந்தை பெறுவதற்காகப் பகீரதப் பிரயத்தனங்கள் செய் கிருர்கள் அதற்காக எத்தனை கஷ்டங்கள்ை அனுபவிக்கத் தயாராயிருக்கிருர்கள்! - நம்முடைய நாட்டில் எத்தனை இபண்கள் குழந்தை பெறவேண்டும் என்ற ஆசையால் கோவிலுக்கும். குளத்துக்கும் ப்ோகிருர்கள். எத்தனை பெண்கள் கோவில்களில் போய் வெறுஞ்சோற்றைக் கையால் எடுத்துண்ணுமல்_வாயால் எடுத்து உண்னும் கஷ்டமான காரியத்தைச் செய்து வருகிரு.ர்கள்! எத்தனை பெண்கள் அதற்காக மருந்து சாப்பிடுகிருர்கள், ஆப்ப