பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 16.1 கர்ப்பத்தடை வைத்திய சம்பந்த முடையதுதான். வைத்தியர்களுடைய அபிப்பிராயம் முக்கியமானதுதான். ஆளுல் அவர்களுடைய அபிப்பிராயத்துக்கு மதிப்புக் கொ டுக்க வேண்டுமானல், அவர்கள் இது விஷயத்தை நன்ருய்க் கற்றும் ஆராய்ந்தும் இருக்கவேண்டும். அத்துடன் அவர்கள் கர்ப்பத்த்டையை ஆதரித்தாலும், ஆட்சேபித்தாலும்வைத் திய காரணங்களைக்கொண்ட்ே ஆதரிக்கவும் ஆட்சேபிக்கவும் வேண்டும். அதைவிட்டு அவர்களும் சாதாரண் ஜனங்களைப் போலவே விஷயத்தை ஆராயாமலும் காய்தல் உவத்தல் அகற்ருமலும் அபிப்பிராயம் கூறமுற்பட்டால், அவர்களு டைய அபிப்பிராயத்துக்கு எவ்வித மதிப்பும் கொடுக்க லாகாது. i நம்முடைய நாட்டில் இன்னும் வைத்திய கலாசாலை களில் இந்த முக்கியமான விஷ்யத்தைப் பற்றிய கல்வி கொ டுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் வைத்தியர்களும் மிகச் சிலரே.அதனால் அவர்கள் அநேகமாக வேறு காரணங்களைக்கொண்டே ஆட்சேபம் கூற முற்பட்டு விடுகின்றனர். ஆதலால் இது விஷயத்தில்,அமெரிக்க சர்க்காரின் பெண் ஆரோக்கியக் கமிட்டியின் காரியதரிசியான டாக்டர் டக்கின்ஸன், அமெரிக்க வைத்திய சங்கத்தின் தலைவரான டாக்டர் ஜேக்கபஸ், சக்கரவர்த்தியின் டாக்ட்ரான டாலன் பிரபு, ஆங்கில பிரபல சர்ஜன் ஸ்ர் ஆர்பத்னட்லேன், பிரிட் டிஷ் வைத்திய சங்கத்தின் காரியதரிசி டாக்டர் காக்ஸ் , சென்னை ராஜதானி பிரபல பிரசவடாக்டர் லட்சுமணசாமி முதலியார் போன்ற பெரியவர்களின் அபிப்பிராயங்களையே ஏற்று நடக்குமாறு சிபார்சு செய்கிறேன். இவ்ர்களைப் போலவே டீன் இஞ்ச், பார்ன்ஸ் போன்ற பிரபல பாதிரிகளும்,- பெர்னட்ஷா, ஹெச். ஜி வெல்ஸ் போன்ற ஆசிரியர்களும்-பிரிவி கவுன்ஸில்'தலைவர் பக்மாஸ் டர் பிரபு, பால்பர் பிரபு போன்ற சட்ட நிபுணர்களும்பெட்ரண்ட்ரஸ்ஸல், ஜூலியன்ஹக்ஸ்லி போன்ற விஞ்ஞானி களும், மிச்சிகன் சர்வகலாசாலைத் தலைவர் லிட்டில், கொலம்பியா சர்வகலாசாலை அறிஞர் கிட்டிங்ஸ்போன்ற போதகாசிரியர்களும், அமெரிக்க விவசாய இலாகாவின் பொருளாதார ஆலோசகரான டாக்டர் பேக்கர், ஆஸ்திரே