பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弘64 - விவாகமானவர்களுக்கு - இங்சிலாந்தில் புத்தி மந்தமானவர்களுடைய பராமரிப் :புக்மாக சர்க்காருக்கு வருஷத்துக்கு 80 லட்சம் பவுன் செல வாகிறதாம். 'இந்தப் பணத்தைக் கொண்டு எத்தனை லட் சம் நல்ல குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்கவும் கல்வி .பயிற்றவும் செய்யலாம்” என்று பேர்ல்டன் ப்ாதிரியார் கூறுகிரு.ர். o உலகத்தில் யுத்தம் உண்டாவதற்குப் பல காரணங்கள் உண்டாயினும் அதன் மூல காரணங்கள் நாட்டாசையும் மார்க்கெட் ஆசையும்த்ான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு தேசத்தின் ஜனத்தொகை அளவுக்கு மிஞ்சி விட்டால் அந்த ஜனங்க்ள் தங்கட்கு வசிப்பதற்காக இட்ம் தேடவேண்டிய அவசியம் உண்டாகின்றது. ஜப்பான் தேசத்தார் தங்கட்கு ஜப்பானில் இடம்போதர்ததால் ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புவதையும் ஆஸ்திரேலிய ஆங்கிலேயர் அதற்குச் சம்ம திய்ாததையும் யாவரும் அறிவர்.தென் ஆப்பிரிக்காவெள்ளே யர் அங்குள்ள இந்தியரைத் துரத்திவிட முயல்வதும்-உலக மறிந்த விஷயம். இந்தக் காரணத்தால் நாடு பிடிக்க வேண் டும் என்று ஆசிை உண்டாகி அதன் காரணமாக யுத்தம் ...மூள்கின்றது. சில நாடுகளில் கிராமங்களிலுள்ள ஜனங்கள் அதிகப் பட்டு விட்டால் அப்பொழுது அங்குள்ள வயல்கள் அவர்க ஞக்குப் போதுமான் உணன்வ் அளிக்க முடியாமல் போகின் நன. அப்பொழுது கிராமவாசிகள் நகரங்களே நாடிவந்து கைத்தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஆல்ை அட் :படி அவ்ர்க்ள் அந்தச் சாலைகளில் வேலை பார்த்துப் பிழைக் கவேண்டுமானல், அவர்கள் தயாராக்கும் பொருள்கள் உட ஆணுக்குடன் விலையாகிக் கொண்டிருக்கவேண்டும். ஆல்ை கைத்தொழிற்சாலைகள் அபரிமிதமாகக் குவித்து விடுவதால், அவைகளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய அவசியம் உண்டாகிறது. அத்னல் எந்த நாட்டுக்கு அனுப்பு கிருர்களோ அந்த நாடு அப்பொருள்களை உண்டு பண்ணும அலும் அவைகளை வர்ங்க மறுக்காமலும் இருக்கும் பொருட்டு அந்தநாட்டை ஜயித்து அடிமையர்க்க வேண்டியிருக்கிறது. ஒரு நாட்டார். இப்படி ஒரு நாட்டை தங்கள் 'சந்தை' " iாகச் செய்தவுட்ன் பிறநாட்ட்ாரும் தங்கட்கு அதில் பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பிக்கிருர்கள், அதன் மூலம் அயுத்தம் மூண்டு விடுகின்றது.