பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 80 - விவாகமானவர்களுக்கு - இங்கிலாந்து தேசத்தில் 18-வது நூற்றண்டின் இறு தியில் மால்துஸ் என்று ஒரு பெரியார் இருந்தார். அவர் தம் நாட்டில் 1700-ம் வருஷத்தில் 55லட்சமாக இருந்த ஜனத்தொகை 100 வருஷ காலத்தில்-அதாவது 1800-ம் வருஷத்தில் 90 லட்சமாக ஏறி விட்டதாகக் கண் டார். 2 ஆயிரம் வருஷங்களுக்கு அதிகமான காலத்தில் 55லட்சமாகப் பெருகிவந்த ஜனத்தொகை இப்பொழுது திடிரென்று 100வருஷ காலத்தில்_90 லட்சமர்கப் பெருகி விட்டதே இந்த மாதிரியாக்ப் பெருகுமானல் அதற்குத் தக்கவாறு உணவுப் பொருள்களும் பெருகுமானல் தானே நல்லது என்று சிந்திக்கலானர் அதைப்ப்ற்றி ஆராய்ச்சி செய்தார். கடைசியாகத் தம்முடைய ஆராய்ச்சி முடிவுகளை 1798-ம் வருஷத்தில் ஜனத்தொகைக் கட்டுரைகள்’’ என்ற பெயரால் வெளியிட்டார். அதில் அவர் ஜனத்தொகை குறிப்பிட்ட கால அளவு களில் 2-4-16-256 ஆக்ப் பெருகுவதாகவும், அதேகால அளவுகளில் உணவுப் பொருள்கள் 2-4-8-16 ஆகவே பெருகுவதாகவும், அதனல் பெருகிய ஜனங்களுக்குப் போது மான் உணவு கிடையாமற் போகும் என்பதாகவும், ஆதலால் ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்பத்ாகவும் புள்ளி விபரங்களுடன் விளக்கினர். அவருடைய நூல் அறிவாளிகளின் மனத்தை ஒரு கலக்கு கலக்கிற்று, எங்கு பார்த்தாலும் அதைப்பற்றியே பேச ஆரம்பித்தார்கள். அவருடைய நூலை ஆதரிக்கும் நூல் களும், ஆட்சேபிக்கும் நூல்களும் வெளியாயின. இறுதியில் அறிஞர்கள் ஜனத்தொகை அளவுக்கு மிஞ்சிப் பெருகு வதையும் அதனுல் அநேக கஷ்டங்கள் உண்டாய் வருவ தையும் ஒப்புக்கொண்டார்கள். அப்படியானுல் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தக் கூடிய வழியாது? அறிஞ்ர் மால் தூஸ் கூறிய வழி பிரமச்சரி யமே யாகும். ஆனால் அதை எல்லோரும் அனுஷ்டிக்கமுடி யாது என்ற காரணத்தால், அறிஞர்கள் ஜனத்தொகைக் கட்டுப்பாட்டின் அவசியத்தை ஏற்றுக்கொண்டாலும், அதற்கான பிரமச்சரிய வழியை ஏற்றுக் கொள்ளவில்லை.