பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - விவாகமானவர்களுக்கு - ஆனல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அதற்கான பிரசாரம் மட்டும் நடந்துவந்ததேயன்றி ஆஸ்பத்ரி வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அதனல் பணக்காரரும் நடுத்தர வகுப்பினருமே அவைகளைக் கையாண்டு வந்தார்கள், 1921 - ம்வருஷத்தில் டாக்டர் ஸ்டோப்ஸ் என்னும் விஞ்ஞான நிபுணர் ஒரு ஆஸ்பத்ரி ஏற்படுத்திய பின்தான் கர்ப்ப்த்தடை முறைகள் ஏழைகளுக்கு உபயோகமாயின. அமெரிக்காவில் 1900 வருஷத்தில் மாக்கரட் ஸாங்கர் என்னும் பெண்மணி ஒருவர் நர்ஸுவேலை பார்த்துவந்தார். அந்த வேலையிலிருந்த பொழுது ஏழைப் பெண்கள் கருத் தரிப்பதாலும் கருவைச் சிதைப்பதாலும் அவஸ்தைப்படு வதைக் கண்டு மனம் இளகி கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அவர்தான் கர்ப்பத்தடை என்பதன் ஆங்கிலச் சொற்ருெடரைச் சிருஷ்டித்தவர். அவர் கர்ப்பத் தடையைப் ப்ரவச் செய்வதற்காக 'மாதர் புரட்சி' என்னும் மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். ஆனல் சர்க்கார் உடனே அதை ஆபாசமான் பிரசுரம் என்று பறி முதல் செய்தார்கள். அது சம்பந்தமாகப் பலர் சிறை செல்லவும் நேர்ந்தது. ஸாங்கர் அம்மையாரும் இருமுறை கைதியானர். இப்படி அரசாங்கம் செய்ததன் பயனுக எங்கும் இனங்கள் கர்ப்பத் தடையை அதிகமாக அறியவும் அனுஷ்டிக்கவும் ஆரம்பித்தார்கள். இப்பொழுது கர்ப்பத்தடை அனுஷ்டியாத தேசமே கிட்ையாது. எல்லா தேசங்களிலும் அதற்காக்ச் சங்கங்களும் ஆஸ்பத்திரிகளும் ஏற்பட்டுள. அறிஞர்கள் அனைவரும் ஆதரிக்கின்ருர்கள். சில தேசங்களில் அரசாங்கமும் உதவி செய்கின்றது. ஹாலந்திலும் ருஷ்யாவிலும் மெக்ஸி கோவி லும் சர்க்காரே ஆஸ்பத்திரிகள் வைத்துக் கர்ப்பத்தடை வசதிகளைச் செய்து தருகிருர்கள். நம்முடைய நாட்டில் 1892 - ம் வருஷத்திலேயே பம் பாய் ஹைக்கோர்ட்டார் கர்ப்பத்தடை நூல்களை ஆபாச மாகக் கருதுதலாகாது என்று தீர்ப்பளித்தார்கள். மைசூர் சர்க்கார் தங்கள் ஆஸ்பத்திரிகளில் கர்ப்பத்தடை முறை தெரிய ஆரும்புவோர்க்குக் கற்றுக் கொடுக்குமாறு ஏற்பாடு