பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 17 ஆகவே, காதல் உணர்ச்சி, குழந்தை வேண்டுமென்ற ஆசை கடவுளால் கொடுக்கப்பட்டது. இயற்கை அன்னை யால் அருள்ப்பெற்றது. அதனால் அது அழியாது. அதை அழிக்க முடியாது. அதை அழிக்கவும் கூடாது. காதலே அறியாதவர் கடவுளை அறியார். மக்களை விரும்பாதவர் மனிதர் ஆகார். ஆனால் இவ்விதம் கூறுவதால் எத்தனை குழந்தைகள் வேண்டுமானலும் பெறலாம் என்பதன்று. என் கேள்வி 'குழந்தை ஆசை” அழியாததுதான். அழிக்கக் கூடாததுதான். ஆனல் அதற்காக-அந்த ஆசையைப் ர்த்தி செய்வதற்காக--ஒன்றிரண்டு குழந்தைகள் பாத்ாதோ, ஒன்பது பத்து தேவையோ? இதுவே என் கேள்வி. குழந்தை வேண்டு மென்ற ஆசை தர்ம நியாயமான ஆசைதான். அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டிய தும் அவசியம்தான். ஆனால் அந்த நல்ல காரியத்துக்கும் எல்லை யுண்டு. குழந்தைகள் பெறுவதால் நமக்கும் நாட் டுக்கும் நன்மை விளையவேண்டுமானல், அந்த ஆசைக்கு ஒர் அளவு அமைத்தாக வேண்டும். அளவுக்கு மிஞ்சில்ை அமிர்தமும் நஞ்சாகும். மக்கட்பேறு அவசியம். ஆனல் குழந்தைகளை அளவுக்கு அதிகமாகப் பெற்றுவிட்டால்: அந்தக் குழந்தைகளுக்கும் துரோகம் செயதவர்களா வோம். நமக்கும் கேடு விளைவித்துக் கொண்டவர்களா வோம். தேசத்துக்கும் தீங்கு தேடியவர்களாவோம். எல்லை ஏற்படுத்திக்கொள்ளலாம், அளவு அமைத்துக் கொள்ளலாம். இத்தனை குழந்தைகள்தான் நமக்கு அவசி யம், இத்தனை குழந்தைகளைத்தான் நம்மால் காப்பாற்ற: முடியும் என்று தீர்மானித்துக்கொள்ளலாம். ஆனால், நாம் எத்தனை குழந்தைகள் பெற விரும்புகிருமோ ஆத்தனை குழந்தைகளையும் பெற்றுவிட்டால், குழந்தைகள் வேண்டு மென்ற நம் ஆசை பூர்த்தியாய்விட்டது என்று கூற முடியுமா? உடம்பைப் போஷிக்க ஆகாரம் தேவை. ஆல்ை எந்த ஆகாரமும் உடம்பைப் போஷத்துவிடுமா? போவிக் கக்கூடிய சத்துள்ள உணவே உண்ணவேண்டிய ஆகார மாகும். அதுபோல், குழந்தை பெற்றதால் மட்டும் குழந்தை ஆசை பூர்த்தியாய்விடாது. நல்ல குழந்தைகள்