பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 90 - விவாகமானவர்களுக்கு - தடை சாதனங்களை விற்கவும் - அவற்றை உபயோகிக்கும் முறையைக் கற்றுக் கொடுக்கவும் - அது விஷயத்தில் சர்க்காரையும் சட்ட சபையையும் அக்கரை காட்டும்படி கேட்டுக் கொள்ளவும் - சிசு சம்ரட்சணைசாலைகளில் வசதிகள் செய்து தரும்படி முனிசிபில் சபைகளை வேண்டிக் கொள்ளவும் - கர்ப்பத்தடைக்கு துணையான கர்ப்பச் சிதைவு, கட்டாய ஆப்பரேஷன் போன்ற விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை நடத்தவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இப்படி யெல்லாம் செய்தால்தான் சர்க்கார் ஜன சமூக முன்னேற்றத்துக்காகச் செய்யவேண்டும் என்று நாம் மேலே கூறிய காரியங்களைச் செய்யும் நன்ள்ை உதயமாகும். அனுபந்தங்கள் அபிப்பிராயங்கள் (1) பிரிட்டிஷ் சக்ரவர்த்தியின் வைத்தியர் டாஸன் பிரபு 1921 - ம் வருஷத்தில் பர்மிங்ஹாமில் நடந்த கிறிஸ் தவ சர்ச் காங்கிரஸில் கூறியது: - கர்ட் பத் தடை விஷயம் வேரூன்றிவிட்டது என்று தைரி யமாகச் சொல்வேன். அது முடிவான விஷயம். அதனல் நன்மையோ, தீமையோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டி யதே. அதைத் திருத்தலாம், அதை ஒழித்துவிட முடியாது. (2) ஆங்கில பிரபல டாக்டர் ஸர் தாமஸ் ஹார்டர்:நன்ருக ஆராய்ந்து பார்த்தால் மனித ஜாதியை உயர்த் துவதற்காக நாம் கையாளக் கூடிய வழிகளில் சிறந்தது கர்ப்பத் தடை ஒன்றே. (3) ஆங்கிலப் பிரபல சர்ஜன் ஸர் ஆர்பத்னட்லேன் என்பவர் ஹார்னி புரூக் அம்மையார் எழுதியுள்ள கர்ப்பத் தடை நூலின் முகவுரையில் கூறுவது: மனித ஜாதியின் rேமத்தில் அக்கரையுள்ளவர்கள் எல்லோரும் ஆராய்ந்து வரும் கர்ப்பத்தடை விஷயமாக எழுதியுள்ள இந்த நூலுக்கு முகவுரை கூறுவது எனத்கு அதிக சந்தோஷத்தைத் தருகின்றது. ஆசிரியையின் முயற்சிகளுக்கு ஆசி கூறுகின்றேன். (4) பிரிட்டிஷ் வைத்திய சங்கத்திற்கு 24 வருஷ கால மாகக் காரியதரிசியாயிருந்த டாக்டர் ஆல்பிரட் காக்ஸ்: