பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ஒரு யோசனை -- 23. வேண்டியதில்லை. அபோதுல் குழந்தையைப் பெற்றதற் காகக் குழந்தை பெற்றவள் இறக்க வேண்டியதில்லை. அல்லவா ? வாழை வைத்தவன் வாழை வைத்ததற்காக இறப்ப தில்லை. ஆனால் நமது நாட்டில் குழந்தை பெறுபவள் குழந்தை பெற்றதற்காக இறந்துவிடுகிருள். இந்த விப. ரீதம் எங்கும் காண முடியாது. அப்படி இறக்கும் பெண் களின் தொகை தெரியுமா ? அது சிறிதா ? குழந்தை. கள் 100-க்கு 30 வீதம் இறந்தால், குழந்தை பெறும் தாய்" மார் 100-க்கு 20 வீதம் இறக்கின்றனர். நூற்றுக்கு 20: பெண்கள் !--இதைச் சற்று சிந்தியுங்கள். ஒர் ஊரில் இந்த வருஷம் 100 பேர் வாழைத் தோட்டம் வைத்தனர். அவர்களில் 20 பேர் அந்தக் காரணத்திற்காக இறந்து விட்டனர்' என்று ஒரு செய்தி கேட்டால், அநியாயம், அநியாயம் ! என்று எங்கு பார்த்தாலும் பேச்சாகிவிடும். பெரும் பரபரப்பு உண்டாகிவிடும். காரணம் காணக் கமிட்டிகள் காணப்படும்--விசேஷ மாநாடு கூட்டப் பெறும்-- அவசர யோசனைகள் செய்யப் பெறும். அர சாங்கத்தாரும் கவலை கொள்வர். ஆனல் ஓர் ஊரில் குழந்தை பெற்ற பெண்களில் 100பேரில் 20 பேர் அந்தக் காரணத்திற்காக இறந்துவிட்டார்கள் என்ருல், யாரும் அதைப்பற்றி அணுவளவும் சிந்திப்பதில்லை. வாழைப் பயிர் விஷயத்தில் எவ்வளவு பரபரப்பு!-மக்கட் பயிர் விஷயத்தில் எத்தனை அசிரத்தை! என்னே நம் அறிவு, என்னே நம் முன்னேற்றம்! நூற்றுக்கு 30 குழந்தைகள், நூற்றுக்கு 20 தாய்மார் இறந்து விடுகின்றனர் என்று கூறும்பொழுது, 'இதென்ன பிரமாதம்? கோடானு கோடி மக்கள்_வாழும் இந்த நாட்டில் 20-ம் 30-ம் எவ்வளவு சிறிய தொகை?' என்று எண்ணிவிடக்கூடும். ஆனல் 20 என்பதும் 30 என்பதும் இருப்பவர்களின் விகிதமே யன்றி மொத்தத் தொகை. யன்று என்பதை மறக்கக்கூடாது. சென்னை மாகாண மரணங்களைக் குறித்து சென்னை சர்க்கார் ரிப்போர்ட்டுகள் கூறும் புள்ளி விவரங்களைக் கவனியுங்கள். பிறந்து ஒரு வருஷமாவதற்குள் இறந்துவிடும் குழந்தைகள் வருஷ்ந்: தோறும் சுமார் 45 ஆயிரமாகும். இந்தியாவில் 100-க்கு 30 என்ருல் இங்கிலாந்தில் 100-க்கு 6 தான் என்று கூறி னேன். ஆகவே, இந்தியாவிலும் அதே 6 விகிதம் இற்ப்