பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 37 அவர்களிடம் 'இன்னும் எத்தனை குழந்தைகள் பெறத்தீர் மானம் ?' என்று கேட்டால், இதே சிரிப்புத்தான், அந்தச் சிரிப்புக்கு இதே பொருள் தான். ஏழைகளிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டால் அவர் கள் இவ்விதம் சிரிப்பதில்லை. ஆனல் அவர்கள் 'ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான். இரண்டு மூன்று குழந் தைகள் உள; இவைகளையே காப்பாற்ற முடியவில்லை. இன்னும் எங்களுக்கு எதற்காகக் குழந்தைகள் ? இந்தக் குழந்தைகள்கூட ஏன், றந்தன என்று எண்ணும் எங்க ளுக்குப் புதிதாகப் புத்திர புத்திரிகள் எதற்கு? ஆனல், ஐயா பாருங்கள்! பணக்காரர்கள் குழந்தைகள் இல்லையே என்று எவ்வளவு வருந்துகின்றனர். குழந்தை பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவு பிரயத்தனப் படுகின்றனர். எத்தனை கோயில்களுக்குப் போகின்றனர். எத்தன்ை குளங்கள் வெட்டுகின்றனர், என்ன என்ன தான தருமங்கள் செய்கின்றனர். என்ன என்ன புண் னியக் கிரியைகள் இயற்றுகின்றனர். ஆனாலும் அவர் களுக்குக் குழந்தை பிறப்பதில்லை. கடவுகளுக்குக் கண் *ိန္က எங்களுக்கு வேண்டாம் வேண்ட்ாம் என்று கதறுகிருேம். ஆனல் எங்களுக்கு கொடுத்துக்கொண்டே யிருக்கிருன். குழந்தைகள் வந்து கொண்டே இருக் கின்றன. என்ன செய்வோம் ? குழந்தைகள் வேண் டாம்தான். ஆனல் வழி தெரியவில்லையே! கடவுள் அல்லவோ கருனை செய்யவேண்டும்?' என்று கூறிக் கையை விரிக்கிரு.ர்கள். ஒரு சிலரோ _ஐயா இதென்ன கேள்வி : மரம் வைப்ப்வன் தண்ணிர் விடுவான். இதைப்பற்றி நமக்கென்ன விசாரம்?' என்று கூறுகின்றனர். ஆனல் 'வேருெருவன் மரம் வைப்பது மில்லை, மரத்துக்குத் தண்ணிர் வார்ப்பதுமில்லை. மரம் வைப்பவரும் நாம்தான். மரத்திற்குத் தண்ணிர் வார்த்து வளர்க்க வேண்டியவரும் நாம்தான். தண்ணிர் விடாவிட்டால் மரம் பட்டுப் போகும், சந்தேகமில்லை. வேருெருவனை எதிர்நோக்கிப் பலனில்லை' என்று நான் கூறிஞல், அவர்களுக்கு - ஒன்றும் விளங்குவதில்லை; இந்த விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கவே மறுத்து விடுகிருர்கள். என்னமோ அவனவன் விதிப்படி நடக்கிறது, என்று கூறிப் போய்விடுகிரு.ர்கள்.