பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - விவாகமானவர்களுக்கு - ஒருவர் வயலில் நெல் அறுத்துக்கொண்டு வருகிருர். அக்கம்பக்கத்து வயல்களில் நல்ல மகசூல் காணவில்லை. இவருடைய வயலில் மட்டும் அதிகமான மகசூல். எல்லோ ரும் ஆச்சர்யப் படுகிருர்கள், அவரிடம், ஐயா , உங்க களுக்கு மட்டும் அதிகமான நெல் கிடைத்ததே, காரணம் என்ன ?' என்று கேட்டால், 'கடவுள் தந்தார்' என்று அவர் கூறுவதில்ல்ை. 'இத்தனை முறை உழுதேன், இன்னவிதம் விதை தயாரித்தேன், இன்னவகை உரம் இட்டேன், இன்ன முறையில் பக்குவங்கள் செய்தேன்' என்று இப்படிப் பல ப்டத் தம் சாமர்த்தியத்தைப் பற்றி விஸ்தரிக்க ஆரம்பித்து விடுகிரு.ர்கள். தமக்கு அதிக நெல் கிடைத்தது தம்முடைய விவசாய சாமர்த்தியத்தால் தான், ஆண்டவனுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது அவர் அபிப்பிராயம். ஆனல் அதிக நெல் விளையப்பெற்ற அவருக்கே அநேகம் குழந்தைகள் பிறந்திருக்குமால்ை, அவரிடம் 'தங்களுக்கு இத்தன்ை குழந்தைகளா?' என்று கேட்டுப் பாருங்கள். என்ன மறுமொழி கூறுவார்?'ஆம் இத்தனை குழந்தைகள்தான். என் செய்வேன், கடவுள் செயல் 1’ என்றே கூறுவார். நெற்பயிர் அதிக மகசூல் தந்தால் அதற்குக் காரணம் தம் சாமர்த்தியம்; ஆனல் மக்கட் பயிர் அதிக மகசூல் தந்தால் அதற்குக் காரணம் கடவுள் செயல், இந்த முரண்பாட்டை யாரும் கவனிப்பதில்லை. அடுத்த வீட்டார் புறக்கடைத் தோட்டத்தில் பறங்கிக் கொடியில் பருமனை காய் காய்த்தால், அதற்குக்காரணம் என்ன ? நம் புறக்கடையில் அது மாதிரி காய்க்கச் செய்வது எப்படி? அந்தத் தோட்டத்தின் மண்மாதிரிதானே நம் தோட்டத்து மண்ணும். இடையில் ஒருசுவர் தானே? அவர் எங்கே விதை பெற்ருர், என்ன உரமிட்டார். என்ன பக்குவஞ் செய்தார்’ என்று ஆராய ஆரம்பித்து விடுகிருேம், ஆராய்ந்து இறுதியில் அதேமாதிரிப் பறங்கிப் பயிர் செய்தும் விடுகிருேம்.Tஅதே மாதிரிப் பருமனை காய்கள் பறிக்கவும் செய்கிருேம். ஆனல் பாருங்கள், அதே அடுத்த வீட்டாரின் மகளுக்கு ஒர் அழகான குழந்தை பிறக்கிறது, ஆரோக்கியமாயும், ப்லம் பொருந்தியதாயும், அறிவு மிகுந்ததாயும் வளர்கிறது. அதைக் கண்டு நமக்குப் பாருமை உண்டாகிறது. நம் மகளுக்கும் அத்தகைய குழந்தை பிறந்தால் என்ன என்று எண்ணுகிருேம். ஆனல் அடுத்த வீட்டாருக்கு அழகான பேரன் பிறக்கவும், நமக்கு அழகில்லாத பேரன் பிறக்கவும்