பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 29 காரணம் என்ன என்று ஆராய ஆரம்பிப்பதில்லை. நம் தலைவிதி, நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். கொடுத்து வைத்தவர்க்குக் கிடைக்கும், போன ஜன்ம்த்தில் அவர் என்ன புண்ணியம் செய்தாரோ, நாம் என்ன பர்பம் செய்தோமோ?’ என்று எண்ணி எண்ணி வருந்துகிருேம். அவ்வளவே. அதற்கு மேல் ஒன்றும் நமக்கு விளங்குவதில்லை. தலைவிதி-கடவுள் செயல்-கொடுத்து வைத்தவன்-என்பன நம் அறிவை வேலை செய்ய முடியாமல் தடுத்துவிடுகின்றன. புறங்கிக்கொடி பருமனாகக் காய்க்கும்படி செய்ய நமக்கு வ தெரியும். ஆனல் மக்கட்கொடி அழகான கனி தரும்படி செய்ய நமக்கு வழி தெரியாது. வழி தேடுவோம் என்று கூட நாம் கூறுவதில்லை. வழியே கிடையாது என்று கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுகிருேம். பறங்கிப் பயிர் விஷயத்தில் அந்தத் தோட்டத்தின் மண்ணுக்கும் நம் தோட்டத்தின் மண்ணுக்கும் வித்தியாச மில்லையே, அந்த மண்ணை எவ்விதம் தயார் செய்தார், என்ன உரமிட்டார், எவ்விதமான விதையிட்டார், எவ்விதமான பக்குவங்கள் செய்தார் என்றெல்லாம் யோசிக்கத் தொடங்குகிருேமே, அதுபோல் குழந்தை ಸ್ಥಿಥ್ವಿಖ್ಖ அவர் மகள் வயிறு போல்தானே நம் மகள் வயிறும் என்று ஞாபகப்படுத்திக் கொள்கிருேமா? அவர் தம் மகளே எவ்விதம் போஷித்தார், குழந்தை அழகாகப் பெறுவதற்குத் தக்கவாறு எவ்விதம் அவர் தம் மகளை வளர்த்தார், என்ன ஆகாரங்கள் கொடுத்தார், என்ன விஷயங்கள் கற்பித்தார், எத்தகைய புருஷ்ன்ைத் தேடினர், மகள் எந்தக் காலத்தில் கருத்தரித்தாள், கர்ப்பமுற்றபின் எவ்விதம் கவனித்துவந்தார்,என்பன போன்ற விஷயங்களைச் சிறிதேனும் சிந்திக்கிருேமா? இல்லை. கடவுள்செயல்' என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிருேம். ஆராய்ச்சியும் அலட்சியமும் சூரிய மண்டலத்திலுள்ள வஸ்துக்கள் எவை? சந்திர மண்டலத்தில் ஜலம் உண்டா? செவ்வாய் மண்டலத்தில் ஜீவன் உண்டா?-என்று மனிதன் வான சாஸ்திர ஆராய்ச்சிகள் பல செய்கிருன். இமயமலையில் ஏறி, அதன் எவரஸ்ட் சிகரத்தைக் காண அரும்பாடுபடுகிருன். பளிபிக்