பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 3 I உண்டுபண்ண வழி தேடுவோம்’ என்று எண்ணுகிருன், முயல்கிருன், முடித்துவிடுகிருன். அந்த அபூர்வ மரத்தைச் சிருஷ்டி செய்து விடுகிருன் ! ஆனல் இந்த அற்புத சிருஷ்டிகள் எல்லாம் எதற்காக? மக்கள் உபயோகத்துக்காகத் தானே? நாளை உலகில் மக்கட் பூண்டே இராது என்று ஏற்படுமானல், இன்று யார் இவ்வித ஆராய்ச்சிகளும் முயற்சிகளும் செய்வார்? மக்கள் அனுப விப்பதற்காகவே இத்தனை ஆராய்ச்சிகளும் சிருஷ்டிகளும். ஆனல் அனுபவிக்கவேண்டிய மக்களின் சிருஷ்டியில் கவனம் செலுத்துவதில்லையே, ஏன்? நல்ல பசுக்கன்று வேண்டுமென்று ಶ್ಗಳ್ಲ್ಲಿ உடனே முயல்கிருேம். ஆனல் நல்ல குழந்தை வேண்டும் என்று எண்ணுவதில்லை. எண்ணிலுைம் அதற்கு மார்க்கம் என்ன என்று ஆராய்வதில்லை. அவ்விஷயத்தில் சிரத்தை கொள்வதில்லை, எண்ணிவிடுவதோடு சரி, காரிய சித்திக்கு வழி தேடுவதில்லை. மாங்கன்றும் பசுங்கன்றும் மனம் விரும்பும் வண்ணம் சிருஷ்டிக்க முடியுமானல், மக்களையும் மனம் விரும்பும் வண்ணம் ஏன் சிருஷ்டிக்க முடியாது என்று சிந்திப்பதில்லை. சிறிதேனும் சிந்தியாமல், நல்ல குழந்தை வேண்டியதுதான், ஆல்ை அதற்கு நாம் என்ன செய்ய இயலும்! அது மனிதர் செயலா, கடவுள் செயல் அல்லவா?’ என்று கூறி கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்துவிடுகிருேம். அடுத்த வீட்டுக்காரருக்கு நல்ல குழந்தை பிறந்தால் பொருமை கொள்கிருேம். "அவர் கொடுத்துவைத்தவர், அவர் புண்ணியம் செய்தவர், அவருக்கு ஆண்டவன் அருள் செய்துள்ளார்' என்று எண்ணி, நம்மைச் சமாதானப் படுத்திக் கொள்கிருேம். அவ்வளவோடு சரி நம் சிந்தனை. ஆனல் அறிஞர்கள் இப்பொழுது சில வருஷங்களாக இவ்விஷங்களைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து வருகிருர்கள். ஆராய்ச்சி மூலம் பல உண்மைகளைக் கண்டும் வெளியிட்டும் வருகிருர்கள். அந்த உண்மைகளை ஆதாரமாகக்கொண்டு, அநேக சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. வெற்றி பெற்ற சோதனைகளைப் பற்றி வெளியாகும் நூல்கள் பல. மக்கட்பேறு சம்பந்தமான பல விஷயங்கள் நம் கையிலேயே இருக்கின்றன. நாமே அவைகளைச் சாதித்துக் கொள்ளலாம், கடவுள் செயல், தலைவிதி, பழவினை என்று கூறி, கைகட்டிக் கஷ்டப்படவேண்டியதில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் நம்'இஷ்டம்போல் சாதிக்கக் கூடிய காரியங்கள் இவை.