பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:-.ஒரு யோசனை - Jo அவர்கள் காதலைக் கெடுப்பதில்லை, காதல் வளர்ச் சியைத் தடுப்பதில்லை. அதற்கு மாருக, அந்தக் குழந்தையின் விஜயத்தால் அவர்களின்கள்தல் அதிகமாக வளர்ச்சி பெறும், ஆற்றல் அடையும், ஆனந்தம் அளிக்கும். ஆம்; உண்மை தர்ன். கலியாணமாய் ஓரிரண்டு வருஷங்கள் கழிந்த பின் குழந்தை பெறுவதுதான் நல்லது: கலியாணமான வுடனேயே குழந்தை பெற வேண்டிய அவசியமில்லைதான், குழந்தை வேண்டுமென்ற ஆசை வளர்ந்து பெருகி, இனி குழந்தை இல்லாமலிருக்க இயலாது என்ற நிலை அடைந்த பின் குழந்தை பெறுவதுதான் நல்லது. ஆனல் அதற்குள்ள வழி யாது? கலியாணமானவுடனேயே கர்ப்பமும் உண்டா விடுகிறதே, நாம் என்ன செய்யலாம் ? அதைத் தடுக்க மார்க்கம் உண்டோ? கலியாணமானவுடன் கர்ப்பம் வந்து காதலைத்தடுத்து விடுகிறது என்பது மட்டுமன்று, குழந்தை பிறந்து அதிகநாள் செல்லுவதில்லை, அதற்குள் மறுப்டியும் கர்ப்பம் வந்து விடுகிறது. வருஷத்திற்கு ஒரு குழந்தை பெறும் பெண்கள் அநேகர். ஒரு பெண்ணனவள் எவ்வளவு பலமுடைய வளாயும் எவ்வளவு ஆரோக்கியமுடையவளாயும் இருந் தாலும் குழந்தையைப் பத்துமாத காலம் வயிற்றில் தாங்கிக்கொண்டும் தன்னுடைய ரத்தத்தைக் கொண்டு போஷித்து வளர்த்துக்கொண்டும் இருக்கவேண்டியிருப்ப தால் பிரசவகாலத்தில் சோர்ந்து போகின்ருள். அவளுடைய வயிற்றுத் தசைகள் அத்தனை மாதங்கள் இழுத்து விரித்து வைக்கப்பட்டிருந்தபடியால் பலவீனமாயும் தொங்கு சதை யாயும் ஆய்விடுகின்றன. கர்ப்பப்பையை அதன் சரியான ஸ்தானத்தில் வைத்திருக்கவேண்டிய தசைநார்களும் தளர்ந்து போகின்றன. ஆயினும் அவை போஷணையும் ஒய்வும் பெமானல் சிறிதுசிறிதாகச் சோர்வுநீங்கி முன்னுள்ள நிலைமையை அடைந்துவிடும். அப்படிக் குழந்தை 燃 உடல் மீண்டும் பழைய ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அடைய, குறைந்தது மூன்று வருஷங்களேனும் செல்லும் என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். அங்ங்ணமிருக்க, அடுத்தடுத்துக் குழந்தைகள் ஈன்ருல், அவைகளைப் பெறும் ஆன்னையின் ஆரோக்கியமும் பலமும் என்னவாகும்? சிதைந்து, சீரழிந்து சீக்கிரமாக அழிவடையும்' என்பதில் சந்தேகமுண்டோ?